வரலாறு

மன்றம் மலர்ந்த கதை:

Sri Balaji Diabetic Centre, Vijaynagar II Main Road, Velachery – யின் உரிமையாளரான டாக்டர் திரு.சி.வி.பிள்ளை அவர்கள் மிகுந்த சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவர்.

அவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம், அவர்களின் நோயைப் பற்றி ஆராய்ந்து மருந்து கொடுப்பதுடன், அவர்களின் உள்ளங்களையும் பல நாட்களாக ஆராய்ந்ததில், தன்னிடம் வரும் பெரும்பாலான மூத்தோர்கள் நோயினால் அவதிப்படுவதை விட, உள்ளத்தாலும் , மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தார். தனது கஷ்டங்களை வெளியே சொல்லமுடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்து நோயினை அதிகரித்துக்கொள்வதை உணர்ந்தார்.

டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் பல நாட்களாக சிந்தித்து, தனது துணைவியார் திருமதி.சித்ரா அவர்களிடம் பல நாட்களாக விவாதித்து, பின் பல நண்பர்களைச் சந்தித்துப் பேசி, தன்னிடம் வரும் மூத்தோர்களுக்காகவே ஓரு மன்றத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார்.

அதுவே SDBC மூத்தோர் மன மகிழ் மன்றம் மலரக் காரணமாக இருந்தது.

 

மன்றத்தின் நோக்கம் :

தன்னிடம் நோயாளிகளாக வரும் மூத்தோர்கள் அனைவரும் தனிமையில் வாடுவதைத் தவிர்க்கவும், வீட்டிலே அடைந்து கிடப்பதை தவிர்க்கவும், மாதத்தில் ஒரு நாள் மாலை 4 முதல் 8 மணி வரை தனது கவலைகள், கஷ்ட, நஷ்டங்களை மறந்து, சந்தோஷமாக சிரிக்கவும், மற்ற சக மூத்தோர்களுடன் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் இந்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், நடனங்கள், பாட்டுக்கச்சேரிகள், மூத்தோருக்கான பலவகையான விளையாட்டுக்கள் நடத்தி மூத்தோர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் அந்த மாதத்தில் பிறந்த எல்லா உறுப்பினர்களின் பிறந்த நாளையும் மன்றத்தின் சார்பிலேயே கொண்டாட முடிவு செய்யப்பட்டது எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மன்றத்தில் சேரும் உறுப்பினர்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏல்லா செலவுகளையும் டாக்டர் சி.வி.பிள்ளை அவர்களே ஏற்று நடத்த திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

மன்றத்தின் செயல்பாடுகள் :

முதலாவது கூட்டம் 31.03.2013-ல் 18 உறுப்பினர்களுடன் டாக்டர்.சி.வி.பிள்ளை மற்றும் அவர்களது துணைவியார் திருமதி.சித்ரா அவர்களால் குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது. இன்று அதுவே 100 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் , ஒவ்வொரு வகையான, வித்தியாசமான நிகழ்ச்சிகள் அதாவது

  • பாட்டுக்கச்சேரி,
  • நடனங்கள்,
  • பட்டிமன்றங்கள்,
  • பலவகையான விளையாட்டுக்கள்,

Quiz Programmes – களை நடத்தி உறுப்பினர்களை, அவர்கள் தம் கஷ்ட, நஷ்டங்களையெல்லாம், மறந்து வாய்விட்டு சிரிக்க வைத்துள்ளோம்.

அத்துடன், ஒவ்வொரு மாதத்திலும், அந்தந்த மாதத்தில் பிறந்த எல்லா உறுப்பினர்களின் பிறந்த நாளையும் மன்றத்தின் சார்பில் கேக் வெட்டி கொண்டாடி வருகிறோம்.

ஒவ்வொரு உறுப்பினரும், சந்தோஷமாக இருக்கவும், அவர் தம் திறமைகளை வெளிப்படுத்தவும், மிகவும் உறுதுணையாக இந்த மன்றம் இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் 18 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மன்றம் , தற்பொழுது 100-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.