INAGURAL MEETING OF THE SBDC SENIORS CLUB

SDBC மூத்தோர் மனமகிழ் மன்ற ஆரம்ப விழா

மன்றம் மலர்ந்த கதை :

ஸ்ரீ பாலாஜி நீரழிவு மையத்தின் உரிமையாளரான டாக்டர் திரு.சி.வி.பிள்ளை அவர்கள் மிகுந்த சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவர். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம், அவர்களின் நோயைப் பற்றி ஆராய்ந்து மருந்து கொடுப்பதுடன், அவர்களின் உள்ளங்களையும் பல நாட்களாக ஆராய்ந்ததில், தன்னிடம் வரும் பெரும்பாலான மூத்தகுடிமகன்கள் நோயினால் அவதிப்படுவதை விட, உள்ளத்தாலும் , மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தார். தனது கஷ்டங்களை வெளியே சொல்லமுடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்து நோயினை அதிகரித்துக்கொள்வதை உணர்ந்தார்.

டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் பல நாட்களாக சிந்தித்து, பல நண்புர்களை சந்தித்து பேசி, தன்னிடம் வரும் மூத்தகுடிமகன்களுக்காகவே ஓரு மன்றத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார்.அதுவே SDBC மூத்தோர் மன மகிழ் மன்றம் மலரக்; காரணமாக இருந்தது.
முதலாவது கூட்டம் 31.03.2013-ல் 18 உறுப்பினர்களுடன் டாக்டர்.சி.வி.பிள்ளை மற்றும் அவர்களது துணைவியார் திருமதி.சித்ரா அவர்களால் குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது.

மன்றதின் நோக்கம் :

தன்னிடம் நோயாளிகளாக வரும் மூத்த குடிமகன்கள் அனைவரும் தனிமையில் வாடுவதைத் தவிர்க்கவும், வீட்டிலே அடைந்து கிடப்பதை தவிர்க்கவும், மாதத்தில் ஒரு நாள் 3 முதல் 4 மணி வரை தனது கஷ்ட, நஷ்டங்களை மறந்து, சந்தோஷமாகச் சிரிக்கவும், மற்ற மூத்த குடிமகன்களுடன் தனது கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் இந்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, மாத த்தில் ஒரு முறை எல்லா உறுப்பினர்களும் ஒன்று கூடி, தனது கஷ்டங்களையெல்லாம் மறந்து போகும் வண்ணம். கலைநிகழ்ச்சிகள்,பட்;டிமன்றங்கள், நடனங்கள்,பாட்டுக்கச்சேரிகள், நடத்தவேண்டும் என்ற முடிவுக்கு வரப்பட்டது. அத்துடன் அந்த மாதத்தில் பிறந்த எல்லா உறுப்பினர்களின் பிறந்த நாளையும் மன்றத்தின் சார்பில் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் செலவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மன்றத்தில் சேரும் உறுப்பினர்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏல்லா செலவுகளையும் டாக்டர் சி.வி.பிள்ளை அவர்களே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

ஆரம்ப விழா (31.03.2013) கோலம்

INAGURAL1

வரவேற்பு

INAGURAL2

குத்துவிளக்கு

INAGURAL3

டாக்டர் துணைவியார் திருமதி சித்ரா அவர்கள் விளக்கு ஏற்றுகிறார்கள்

INAGURAL4

வயதில் மூத்த உறுப்பினர் திரு. பாலையன் அவர்கள் விளக்கு ஏற்றுகிறார்கள்

INAGURAL5

டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் விளக்கு ஏற்றுகிறார்கள்

INAGURAL6

ஆரம்ப விழாவில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்

INAGURAL7
INAGURAL8