40TH MEETING ON 26.06.2016

மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 40-வது கூட்டம் (26.06.2016.)

SBDC மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 40-வது மாதாந்திரக் கூட்டம் 26.06.2016 அன்று பேபி மிருதுபாஷிணி இறைவணக்கத்துடன் சுமார் 4.25 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சியாக, நமது உறுப்பினர் திரு.N.கணேசன் அவர்களின் பேத்தியும், திரு.பரணீதரன் மற்றும் கிருத்திகா அவர்களின் மகளுமான பேபி.மிருதுபாஷிணி அவர்கள், தனது மிகவும் சிறப்பான நடனத்தினால், அனைத்து உறுப்பினர்களையும் கவர்ந்தார். அன்னாருக்கு மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசு கொடுக்கப்பட்டது.
பிறகு, இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்த நகைச்சுவையாளர், திரு.கே.ஆர். நடராஜன் அவர்களை,திரு.வி.மகாலிங்கம் அவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்கள். திரு.கே.ஆர்.நடராஜன், தனது பல வகையான நகைச்சுவைகளால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல், அனைத்து உறுப்பினர்களையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார். அன்னாருக்கு மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசு கொடுக்கப்பட்டது.
அதன் பின் ஜுன் மாதத்தில் பிறந்த கீழ்கண்ட உறுப்பினர்களுக்கு பிறநந்த நாள் கொண்டாடப்பட்டது.
1.திரு.எஸ்.சங்கரலிங்கம் ( 07.06.1943 ).
2. திரு.எஸ்.ராமலிங்கம் ( 08.06.1943 ).
3. திரு.எம்;.ராஜாமணி; ( 23.06.1946 ).
4. திரு.எஸ்.ஸ்ரீதரன் ; ( 07.06.1947 ).
5. திரு.என்;.பரமச்சந்திரன் ( 20.06.1955 ).
இம்முறை அனைவரும் ஆண்களாக இருந்ததால், அனைவரின் தலையில் ராஜா டர்பன் (தலைப்பாகை) வைத்து, கையில் பூச்செண்டு கொடுத்து, அத்துடன் மிகவும் உபயோகமான பரிசு ஒன்றும் கொடுக்கப்பட்டது.
புpறந்த நாள் கொண்டாடிய உறுப்பினர்கள் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிக சந்தோஷத்துடன் (ளுயெஉமள ) வழங்கி மகிழ்ந்தனர்.
இந்த மன்றக் கூட்டம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த ளுடீனுஊ பணியாளர்களக்கு, திரு.எம்.ராஜாமணி மற்றும் திரு.எஸ்.ராமலிங்கம் பரிசுகள் வழங்கினர்.
புpறந்த நாள் கொண்டாட்டம் பற்றி சில வார்த்தைகள்:
1) மன்றஆரம்ப காலத்தில், ஒவ்வொரு மாதமும் பிறந்த நாள் கொண்டாடும் உறுப்பினர்களுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

2) அதன் பின், பிறந்த நாள் கொண்டாடும் ஆண்களுக்கு, தலையில் டர்பன் அணிந்தும், பெண்களுக்கு கிரீடம் அணிந்தும், கேக் வெட்டி அல்லது சால்வை அணிந்து பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

3) அதன் பின், பிறந்த நாள் கொண்டாடும் உறுப்பினர்களின்,(மே’2015 முதல் ஏப்ரல்’2016 வரை)
உறவினர்களிடம் நேரில் சென்று, உறுப்பினர்கள் பற்றிய வீடியோ பேட்டி கண்டும், வெளிநாட்டில் இருக்கும் அவர் தம் பிள்ளைகளிடம் றாயவள யிp ழச நஅயடை மூலம் கிடைக்கும் வீடியோக்களையும் பெற்று, மன்றக்கூட்டத்தில் டி.வி-யில் போட்டுக்காட்டி, அதன் பின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
4) தற்சமயம், அதாவது மே’2016 முதல், ஆண்களுக்கு,அவர்களின்; தலையில் ராஜா டர்பன் (தலைப்பாகை) வைத்தும், பெண்களுக்கு தலையில் கிரீடம் வைப்பதுடன், கையில் பூச்செண்டு கொடுத்து, மிகவும் உபயோகமான பரிசு ஒன்றும் கொடுத்து பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேற்கண்ட 5-பேருக்கும் பிறந்தநாள்கொண்டாடிய பிறகு, நமது மன்ற நிறுவனர்
டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள், மன்ற முன்னேற்றத்தைப் பற்றிப் பேசி, அனைவருக்கும் நன்றி கூறி
மன்றக்கூட்டத்தை முடித்து வைத்தார்கள்.

40TH MEETING PHOTOS

BABY MIRTHU BASHINI

SBDC SENIORS CLUB 40TH MEETING ON 26.06.2016.PHOTOS. / Google Photos

CLICK ON PHOTO TO VIEW OTHER PHOTOS