41ST MEETING OF SBDC ON 24.07.2016

SBDC மூத்தோர் மனமகிழ்மன்றத்தின் 41-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
24.07.2016 ஞாயிறு மாலை சுமார் 4.15 மணியளவில், சென்னை,வேளச்சேரி,ஸ்ரீ பாலாஜி மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில், இந்த மன்றத்தின் 41-வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சியாக,பட்டிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.

பட்டிமன்றத்தின் தலைப்பு :

“ வாழ்வின் மகிழ்ச்சிக்கு,
கூட்டுக்குடித்தனம் சிறந்ததா ?
அல்லது
தனிக்குடித்தனம் சிறந்ததா?”
பட்டிமன்ற நடுவர்:
நல்லாசிரியர் ,திருமந்திரத்திலகம், முனைவர். மா.கி.ரமணன்,எம்.ஏ.,எம்.பில்.,எம்.இடி.,டி.ஹெச்.டி.,டி.ஐ.டி.
நடுவர் அவர்கள்,
32 வருட காலமாக ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்கள்.
2006-ல் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்கள்.
12 வருடமாக திருமந்திரத்தைப் போதித்து ‘திருமந்திரத்திலகம ; எனப் பெயர் பெற்றவர்.
16 புத்தகங்கள் எழுதியுள்ளாரகள்.
பட்டிமன்றத்தில் கலந்துகொண்ட மன்ற உறுப்பினர்கள் :

கூட்டுக்குடித்தனம் சிறந்தது              தனிக்குடித்தனம் சிறந்தது

1.திரு.எம்.தெய்வசிகாமணி                    2.திரு.எஸ்.ஆர்.புருஷோத்தமன்
3.திருமதி.வி.முத்துலஷ்மி                    4.திருமதி. வு.சாந்தி
5.திரு.எம்.என்.சீனிவாசன்                      6.திரு.சி.தங்கராஜ்
7.திருமுதி.டி.செல்வம்                             8.திரு.எஸ்.முகமது மாதார்
9.திரு.எஸ்.சிவராமசேது                       10.திருமதி.கே.பகவதி சுந்தரி
11.திரு.டி.எஸ்.கணேசன்                        12.திருமதி.எஸ்.ராஜலஷ்மி
13.திரு.ராஜ்குமார்

(திரு.மணிவாசகனின் மருமகன்)     14.திரு.வி.மணிவாசகம்

15. திருமதி.ஏம்.விசாலாட்சி                 16.டாக்டர்.சி.வி.பிள்ளை.

பட்டிமன்றப் பேச்சாளர்கள் கூட்டுக்குடித்தனத்தைப்பற்றியும், தனிக்குடித்தனத்தைப்பற்றியும் மிகச்சிறப்பாகப்பேசினார்கள்.
நடுவர் அவர்கள், அவர்கள் பேச்சுகளுக்கிடையே, அவ்வப்போது பல கருத்துக்களைச் சொன்னார்கள்.
எல்லா பேச்சுக்களையும் கேட்ட நடுவர், கடைசியாக கூட்டுக்குடித்தனம் மற்றும் தனிக்குடித்தனத்தின் நன்மைகள், தீமைகள் பற்றி பலதரப்பட்ட கருத்துக்களை, விரிவாகப் பேசி,
முடிவாக, “ வாழ்வின் மகிழ்ச்சிக்கு தனிக்குடித்தனமே சிறந்தது” என்ற முடிவைத்தெரிவித்தார்.
நடுவர் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக, அன்னாருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இரண்டாவது நிகழ்ச்சியாக ஜூலை மாதத்தில் பிறந்த கீழ்கண்ட உறுப்பினர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
1. திரு.ஆர். வீரராகவன்                                                    பிறந்த நாள் 22.07.1941.

2. திருமதி.கே. சந்திரகலா                                               பிறந்த நாள் 15.07.1939.

3. திரு.எம்.பரவசராஜூ                                                     பிறந்த நாள் 01.07.1941.

4. திரு. டி.எஸ்.வெங்கடரமண ராவ்                           பிறந்த நாள் 23.07.1943.

5. திரு. ஆர. நடராஜன்                                                       பிறந்த நாள் 12.07.1945.

6. திருமதி. பகவதி சுந்தரி                                                பிறந்த நாள் 16.07.1953.

இந்த வருடத்தில் , முந்தைய வருடத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலிருந்து வித்தியாசமாகக் கொண்டாடும் வண்ணம்,
ஓவ்வொரு ஆடவருக்கும் ராஜா மகுடம்(தலைப்பாகை) அணிவித்தும், கையில் பூச்செண்டு கொடுத்தும், அவர்கள்
உபயோகப்படுத்தும்படியான ஒரு பரிசுப்பொருள் வழங்கியும், பெண்களுக்கு ராணி கிரீடம் அணிவித்தும், கையில்
பூச்செண்டு கொடுத்தும், அவர்கள் உபயோகப்படுத்தும்படியான ஒரு பரிசுப்பொருள் வழங்கியும், பிறந்த நாள்
கொண்டாடப்பட்டது.
பிறந்த நாள் கொண்டாடிய அனைவரும் கூட்டாக சேர்ந்து மற்ற உறுப்பினர்களுடன் போட்டோ எடுக்கப்பட்டது.

3-வது நிகழ்ச்சி: மன்ற உறுப்பினர்களைச்சார்ந்த புது மணத் தம்பதியர்களுக்கு ஆசீர்வாதம் செய்தல்.
இந்த நிகழ்ச்சி. ஜூலை’2016 முதல் புதிதாகச் சேர்க்கப்பட்ட ஒன்று.
இந்த மன்ற உறுப்பினர் திரு.வி.மணிவாசகம் , அவரது மகள் செந்தமிழரசிக்கு 10.07.2016-ல் திருமணம் செய்து வைத்தார்.
மன்றக்கூட்டத்திற்க்கு வருகை தந்த புதுமணத் தம்பதியரான செந்தமிழரசி –ராஜ்குமார் இருவரையும் அனைத்து
உறுப்பினர்களும் ஆசீர்வாதம் பண்ணியதுடன், மன்றத்தின் சார்பில் கவிதை மடல் வழங்கியும், மன்ற நிறுவனர்
டாக்டர்.சி.வி.பிள்ளை , அவரது மனைவி திருமதி.சித்ரா அவர்களால் பரிசுகள் கொடுத்தும்
புதுமணத் தம்பதியினரை உற்சாகப்படுத்தப்பட்டது.
இறுதியாக, மன்றத்தின் நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே
முடிவடைந்தது.

41ST MEETING PHOTOS

 

41st SBDC MEETING PHOTOS / Google Photos

 

 

41ST MEETING VIDEOS

 

 

 

PART I VIDEO – PATTIMANTRAM