42ND MEETING OF SBDC ON 21.08.2016.

SBDC மூத்தோர் மனமகிழ்மன்றத்தின் 42-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
21.08.2016 ஞாயிறு மாலை சுமார் 4.15 மணியளவில், சென்னை,வேளச்சேரி,ஸ்ரீ பாலாஜி மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில், இந்த மன்றத்தின் 42-வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சியாக, மன்ற கமிட்டி உறுப்பினர் திரு.தெய்வசிகாமணி அவர்களின் பேத்தி பேபி. யஸ்வினி பாலா அவர்கள் மிக, அருமையான, அனைவரும் ரசிக்கும்படியான வில்லுப்பாட்டினைப் பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

சிறுமி பாடிய வில்லுப்பாட்டு :
வணக்கம் வணக்கம் வணக்கம்
முந்தி முந்தி விநாகரே
முப்பாட்டு முக்கோடி தேவர்களே,
வந்து வந்துஎம்மை பாருமைய்யா,
தந்தனத்தோம் என்று சொல்லியே,
வில்லில் பாட, ஆமா வில்லில் பாட ஆமா,
வந்தருள்வாய் கலைமகளே,
தலமேல சத்தததோடு,
ராகவ தாள பாவத்தோடு,
நாங்களும் தான் பாடவந்தோமய்யா,
பாட்டுப்பாடி இடை,இடை பேசவந்தோமய்யா,
அதாவது,ஆந்திராவிலிருந்து வந்து ஐ.டி கம்பெனியில் சேருரவா,
கோயம்புத்தூரிலிருந்து வந்து கோர் கம்பெனியில் சேருரவா,
சூரத்திலிருந்து வந்து SHARE கம்பெனியில சேருரவா,
நைஜீரியாவிலிருந்து வந்து நைட் ஷிப்ட் பார்க்கிறவா,
இப்படி எல்லாருக்கும் அடைக்கலமா இருக்கிறது,
நம்ம மெட்ராஸ் என்கிற சென்னை,
எப்படிப்பட்ட சென்னையில ஏரியா ஏரியாவா வீடு காட்டவேண்டியவாள,
ஏரியா ஏரியாவா போய் வீடு காட்டினதால,
லட்டுமாதிரி இருந்த சென்னை FLOOD வந்து மூழ்கிப்போயிடிச்சு,
மழை தண்ணி, மழை தண்ணி, ஆஹா
மழை தண்ணி, மழை தண்ணி, ஆஹா
போர்வெல் போடாம லாரியும் வைக்காம,
மழை தண்ணி, மழை தண்ணி, ஆஹா

காரெல்லாம் போட் (boat) ஆச்சு, மழை தண்ணி, மழை தண்ணி, ஆஹா,
இப்படி தண்ணீரில தத்தளிச்சுட்டிருந்தவாள சென்னைவாசிகள் கைவிட்டிருந்தாலும்,
Volunteers கைவிடல, Liquid stage- ல் இருந்த சென்னைக்கு ,
ஏல்லா  STATE -லிருந்தும் hநடி கிடைத்தது.
ஏப்பாடி,
வர்கீஸ் கேகரி வரைக்கும் சப்ளை,
குஜராத்திலிருந்து குட்ஸ் சப்ளை.
மைசூரிலிருந்து மீல்ஸ் சப்ளை,
பீஹாரிலிருந்து கரன்சி சப்ளை,
இதை வைச்சுண்டு,
துண்ணீரில் தத்தளிச்சுண்டிருந்தவாளுக்கு, ஓரளவுக்கு help கிடைச்சுது.
அப்புறம் என்ன ஆச்சு,
செய்தி கேட்டோ செய்தி கேட்டோ,
இந்து முஸ்லிம் கை கோர்த்துண்டு,
STARS எல்லாம் மனிதன் தான்,
ACTORS இறங்கி வேல பார்த்தா,
சென்னை சிட்டியே நிம்மதியாச்சு,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,
பாரதி சொன்னது பலிச்சுப’போச்சு,
சிக்கல் வந்தது சிதற சென்னை நார்மல் சிட்டியா,
இல்ல,ஒருத்தர் ஒருத்தர் கோதம் சொல்ல, தக்காளி சட்டினியா
டைவர்சிடி எங்களுக்கு வாழ்க்கை மட்டும் தான்
யுனிட்டிக்கு பஞ்சமில்லா சென்னை சிட்டி தான்
ஒருத்தருக்கு ஒருத்தர் எப்போதும் friend தான்
ஒண்ணா இருக்கிறது எங்களோட trend தான்
உழைச்சி முன்னேற எங்க ஊருக்கு வந்தியா
நல்லா பார்த்துக்குவோம் நாங்க தான் இந்தியா.
வாழியவே பல்லாண்டு காலம்
ஒற்றுமையா சேந்தாதான் வாழ்வே
வல்லவரும,; நல்லவரும,; வந்தவரும், வாழ்பவரும்
வாழிய, வாழிய,வாழிய,வாழிய வாழியவே.
இரண்டாவது நிகழ்ச்சியாக,கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாளை (ஆகஸ்ட், 1957) முன்னிட்டு,
திரு.வி.மகாலிங்கம் அவர்களால் தயார் செய்யப்பட்ட, ஒரு வீடியோ தொகுப்பினை உறுப்பினர்களுக்கு போட்டுக்காட்டப்பட்டது.
மூன்றாவது நிகழ்ச்சியாக, தமிழ்நாடு மருத்துவத்துறையில் பணியாற்றி,சர்க்கரை வியாதி ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றவரும்,சுமார் 6 வருடங்களாக வேளச்சேரியில் பலபேருக்கு இலவசமாக யோகா பயிற்சி அளித்து வரும் டாக்டர்.திரு.ஆர்.அறிவுடைநம்பி அவர்கள்,யோகாப்பயிற்சியின் பலனைப்பற்றி மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
அதாவது, யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்ம உணர்வோடு சேர்க்கும் ஒரு விஞ்ஞானப் பயிற்சி;: உடல் மற்றும் மனதைப் புத்துணர்வு பெறச்செய்யும் ஒரு உன்னதக் கலை என்றும், யோகா நமது முன்னோர்கள் உலகத்திற்கு அளித்த ஒரு உன்னத பொக்கிஷம் என்றும் குறிப்பிட்டார்.
யோகா உடலின் வெளி உறுப்புகளுக்கு நன்மையும்,வலிமையும் தருவதோடு, உள்உறுப்புகள் அனைத்தையும் வலிமையாக்கி, உள்உறுப்புகளின் செயலாற்றலைப் பெருக்கி நீடித்த ஆயுளோடு இருக்க வழிவகை செய்கிறது.
முக்கியமான உள்உறுப்புகளான மூளை,இருதயம்,நுரையீரல்,கல்லீரல்,மண்ணீரல்,சிறுநீரகம்,கணையம், கண்கள் போன்ற நுட்பமான உறுப்புகளுக்கு யோகாவினாலேயே நன்மை செய்யமுடியும் என எடுத்துரைத்தும், பதஞ்சலி முனிவர்,திருமூலர், விவேகானந்தர், அரவிந்தர் மற்றும் பல சான்றோர்கள் யோகாவின் சிறப்பினைப்பற்றி கூறியது பற்றியும் பேசி, டாக்டர்;.ஆர்.அறிவுடைநம்பி அவர்கள் தனது உரையினை முடித்தார்.
நான்காவது நிகழ்ச்சியாக, உறுப்பினர்களுக்காக MONKEY BALL விளையாட்டு நடத்தப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் தனது வயதையும் மீறி மிகவும் உற்சாகமாக பந்துகளை லாவகமாக எறிந்து பங்கேற்றுக் கொண்டனர்.
ஐந்தாவது நிகழ்ச்சியாக உறுப்பினர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
மன்றத்தின் மூத்த உறுப்பினரான திரு.எம்.பாலையன் அவர்களுக்கு 90-வது வயது பிறந்ததையொட்டி( 15.07.1927 ), ராஜா மகுடம்(தலைப்பாகை) அணிவித்தும், கையில் பூச்செண்டு கொடுத்தும், அவர்கள் உபயோகப்படுத்தும்படியான ஒரு பரிசுப்பொருள் வழங்கியும், அவரது பிறந்த நாளைக் கொண்டாடி மரியாதை செய்யப்பட்டது.
திரு.சி.வி.நடராஜன் அவர்களின் பிறந்த நாளை ராஜா மகுடம்(தலைப்பாகை) அணிவித்தும், கையில் பூச்செண்டு கொடுத்தும், அவர்கள் உபயோகப்படுத்தும்படியான ஒரு பரிசுப்பொருள் வழங்கியும், பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
பிறந்த நாள் கொண்டாடிய அனைவரும் கூட்டாக சேர்ந்து மற்ற உறுப்பினர்களுடன் போட்டோ எடுக்கப்பட்டது.
வெற்றி பெற்ற ‘ஏ’ அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மன்ற உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி அவர்களால் நடத்தும் லக்கி ட்ராவில் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு திரு.எம்.தெய்வசிகாமணி பரிசுகள் வழங்கினார்.
மன்ற உறுப்பினர் திரு.எஸ்;.ராமலிங்கம் அவர்களால் நடத்தும் லக்கி ட்ராவில் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு திரு.எஸ்;.ராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.
மன்ற நிறுவனர் டாக்டர்.சி.வி.பின்ளை அவர்கள் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றுp
கூறியதுடன் கூட்டம் இனிதே முடிவடைந்தது.

42ND SBDC MEETING DT 21.08.2016

42nd SBDC MEETING DT 21.08.2016 / Google Photos

 

SBDC   42ND MEETING VIDEOS  PART -I  TO  PART – IV. ( 21.08.2016 )