44 TH SBDC MEETING DT 23.10.2016

எஸ்.பி.டி.சி மூத்தோர் மணமகிழ் மன்றத்தின் 44-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

    23.10.2016 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.15 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவ மனையிலுள்ள

அரங்கத்தில் இந்த மன்றத்தின் 44-வது மாதந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            உறுப்பினர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாகவும், கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் அனைவரும் மிகமகிழ்ச்சியாக இருக்கும் வண்ணமும், டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் “கரோக்கி” என்ற நிகழ்ச்சியை செயல்படுத்தமுயன்று, முதல் நிகழ்ச்சியாக 13 பேர் மேடையில் பாடுவதற்கு இசைந்தது மிகப்பெரிய வெற்றியாகும். பாடல்களில் அனுபவம் இல்லாவிட்டாலும், உறுப்பினர்கள் தனது திறமைகளை வெளிக்கொண்டுவர, இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது.

கரோக்கியில் பங்கு கொண்டவர்கள்:

  1. திரு.எஸ்.முகமது மதார்.
  2. திரு.வி.மகாலிங்கம்.
  3. திரு.ஆர்.அறிவுடைநம்பி.
  4. திரு.எம்,ராஜாமணி.
  5. திருமதி.ஜி.கோமதி.
  6. திரு.டி,எஸ்.கணேசன்.
  7. திரு.எஸ்.ஆர்.புருஷோத்தமன்.
  8. திரு.எஸ்.ஸ்ரீதரன்.
  9. திருமதி.சாந்தகுமாரி.
  10. திருமதி.டி.செல்வம்.
  11. திரு.சி.தங்கராஜ்.
  12. திரு.எம்.தெய்வசிகாமணி.
  13. திருமதி.வி.முத்துலட்சுமி.

 

கரோக்கி நிகழ்ச்சி வெகுநேரம் எடுத்துக்கொண்டதால்,

இரண்டாவது நிகழ்ச்சியாக, அக்டோபர் மாத பிறந்த நாள் கொண்டாட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கீழ்க்கண்ட உறுப்பினர்களின் பிறந்தநாள் கொண்ட்டாடப்பட்டது.

  1. திரு.சிவராமசேது (6.10.1940).
  2. திருமதி.எஸ்.சாரதாம்பாள். (10.10.1945).
  3. திரு.எம்.என்.ஸ்ரீனிவாசன். (11.10.1947).
  4. திரு.கே.நாராயணன். (11.10.1947).
  5. திரு.எஸ்.பிச்சை.  (28.10.1950).
  6. திருமதி.டி.உமாதேவி.

 

மேற்கண்ட அனைவருக்கும் பூச்செண்டு கொடுத்தும், சிறப்புப்பரிசு கொடுத்தும் உறுப்பினர்கள் அனைவராலும் பிறந்தநாள் பாட்டுப்பாடி அனைவரின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

  மன்ற உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணி

பரிசுகள் வழங்கினார்.

  மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு. எஸ்.இராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.

 கடைசியில், டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

SBDC 44TH MEETING  DT 23.10.2016 – PHOTOS

 

SBDC- 44th MEETING  VIDEOS