45TH MEETING OF SBDC ON 27.11.2016

எஸ்.பி.டி.சி மூத்தோர் மணமகிழ் மன்றத்தின் 45-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

    27.11.2016 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.15 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவ மனையிலுள்ள

அரங்கத்தில் இந்த மன்றத்தின் 45-வது மாதந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக, மன்ற உறுப்பினர்கள் நிறைய JOKES கள் சொல்லி, மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சிரிக்க வைத்தனர்.

                        இரண்டாவது நிகழ்ச்சியாக, நவம்பர் மாத விளையாட்டு  TRICK IN PLAYING CARDS விளையாடப் பட்டது.                       

      மூன்றாவது நிகழ்ச்சியாக, செல்வி.வி.யு.எம்.ஐஷ்வர்யா அவர்கள் மிகவும் இனிமையான சினிமாப் பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ வைத்தார். மன்ற உறுப்பினர் திரு.அறிவுடைநம்பி அவர்கள், செல்வி.வி.யு.எம்.ஐஷ்வர்யாவுடன் சேர்ந்து ‘ ஆடாத மனமும் உண்டோ” என்ற பாட்டைப் பாடி அனைவரையும் மகிழ வைத்தார்.

நான்காவது நிகழ்ச்சியாக, உறுப்பினர் திரு.சேஷாத்ரி அவர்களின் 80-வது பிறந்த நாளை ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகக் கொண்டாடப் பட்டது. திரு.சேஷாத்ரி அவர்களும், அவரது மனைவியும் மாலை மாற்றிக் கொண்டார்கள். மன்ற முறைப்படி

அவர்களுக்கு மரியாதை செய்தபிறகு, அவர்களிடம் மன்ற உறுப்பினர்கள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

 

     மன்ற உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணி பரிசுகள் வழங்கினார்.

  மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு. எஸ்.இராமலிங்கம்

பரிசுகள் வழங்கினார்.

 கடைசியில், டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

45th MEETING OF SBDC ON 27.11.2016

PHOTOS

SBDC 45TH MEETING ON 27.11.2016. / Google Photos

 

 

VIDEO – PART  I

 

VIDEO PART II

 

VIDEO PART  III

SBDC 45TH MEETING  ON 27.11.2016 -PHOTOS

AF1QipNk-Okk9WNiWlcZv2wCTpiOLolnTj80vbrNR3sU