46TH MEETING OF SBDC MEETING ON 25.12.2016.

46TH SBDC MEETING DT 25.12.2016 

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 46-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

    25.12.2016 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவதுனையிலுள்ள

அரங்கத்தில் இந்த மன்றத்தின் 46-வது மாதந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக, SBDC STAFF – க்காக ஒரு விளையாட்டு நடைபெற்றது. அதில், ஆம்,இல்லை என்ற வார்த்தைகள் இடம்பெறாமல் இருத்தல் வேன்டும் என்ற விதியுடன் திருமதி.கே,பகவதிசுந்தரி அவர்களால் நடத்தப்பட்டது.மன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் ரசித்தனர்.

                        இரண்டாவது நிகழ்ச்சியாக, மன்ற உறுப்பினர் திரு.வி.மகாலிங்கம் அவர்களின் பேரன்கள் விஷேஷ் மற்றும் குமரேஷ் இருவரும் பாட்டு பாடியும் கிபோர்ட் வாசித்தும், மன்ற உறுப்பினர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.

          மூன்றாவது நிகழ்ச்சியாக, டிசம்பர் மாத விளையாட்டாக   Different Type of Musical Chair for Groups A,B,C,& D  and Ball Picking with couple’s faces for Couples Game விளையாடப் பட்டது.    மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.

            நான்காவது நிகழ்ச்சியாக,மன்ற உறுப்பினர் திருமதி.கே.பகவதிசுந்தரி அவர்கள் மூலமாக, வேளச்சேரி அபிநயா

பள்ளி மாணவிகள் நடனம் நடைபெற்றது. 45 நிமிடங்களாக மாணவிகள் சம்யுக்தா, சுவாதிகா, சச்சனா, மேஹ்னா, ஷிவானி, மதிவளகி ஆகியோர் சிறப்பாக நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

            ஐந்தாவது நிகழ்ச்சியாக, டிசம்பர் மாத பிறந்த நாள் கீழ்க்கண்ட நபர்களுக்கு மகுடம்சூட்டி சிறப்புபரிசு கொடுத்து கொண்டாடப்பட்டது.

பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நபர்கள்:   

  1. திரு.டி.ஆர்.ராஜ.கோபால்.
  2. திரு.எம்.என்.பார்த்தசாரதி.
  3. திரு.எஸ்.கோபால்.
  4. திருமதி.எஸ்.சித்ராதேவி.
  5. திருமதி.எல்.சத்யவாணி.

            விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

            மன்ற உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணி பரிசுகள் வழங்கினார்.

  மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு. எஸ்.இராமலிங்கம்

பரிசுகள் வழங்கினார்.

         ஆறாவது நிகழ்ச்சியாக புதுவருடம் 2017-னை புதுவருட கேக் வெட்டியும், ஆடல், பாடல்களோடு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.                     

 கடைசியில், டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

SBDC 46TH MEETING DT 25.12.2016.

PHOTOS

SBDC 46TH MEETING Dt 25.12.2017. / Google Photos

 

 

VIDEO  PART  I

VIDEO  PART  II  -GAME

VIDEO  PART  III  – DANCE

VIDEO  PART  V