47th SBDC MEETING ON 22.01.2017.

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 47-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு

( 22.01.2017 ).
“அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
22.01.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவதுனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 47-வது மாதந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சியாக, உறுப்பினர்கள் அனைவரும்,
” வாழ்க்கையில் அதிகமாக சந்தோஷம் கிடைப்பது,
திருமணத்திற்கு முன்பா ? அல்லது
திருமணத்திற்கு பின்பா ?”
என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு, சிறப்பாக விவாதித்தார்கள்.
கருத்தரங்கு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
பெரும்பாலானோர் வாழ்க்கையில் அதிகமாக சந்தோஷம் கிடைப்பது திருமணத்திற்கு முன்பு தான் என்று பேசினார்கள்.
இரண்டாவது நிகழ்ச்சியாக, செல்வி. அமுர்தா அவர்களின் KEYBOARD ,திரு.வி.ஆனந்த் அவர்களின் மிருதங்கத்துடன் சிறப்பான இசை நடைபெற்றது. கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது.
மூன்றாவது நிகழ்ச்சியாக, 2017 JANUARY, மாத பிறந்த நாள் கீழ்க்கண்ட நபர்களுக்கு மகுடம்சூட்டி சிறப்புப்பரிசு கொடுத்துக் கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நபர்கள்:
1. திரு.பி .ரங்கராஜன் . ( 26.01.1941 )
2. திரு.ஜே.சம்பத்குமார் . ( 21.01.1946 )
3. திரு.முஹம்மது மாதார். ( 01.01.1947 )
4. திருமதி.லக்ஷ்மி நடராஜன். ( 15.01.1952 )
5. திருமதி.ஜி .கோமதி. ( 03.01.1959 )
6. திருமதி.வி.முத்துலட்சுமி. ( 01.01.1960 )
திருமதி.வி.முத்துலட்சுமி அவர்களும், அவரது மகனும்,கணவர் இல்லாமல், பிள்ளைகளை வளர்த்த விதத்தைப் பற்றி பேசியது எல்லாரையும் மனத்தையும்  நெகிழச்செய்தது.
இத்தருணத்தில், திரு.ந.அறிவுடைநம்பி அவர்கள் , ” அம்மா என்றழைக்காத
உயிரில்லையே ” என்ற பாட்டைப் பாடி எல்லாரையும் அசரவைத்தார்.
அதன்பின், நமது டாக்டரைப்பற்றி, திரு.சங்கரலிங்கம் அவர்கள் இயற்றிய கீழ்க்கண்ட கவிதையினை, (ஆலயமணி படம் -பொன்னை விரும்பும் பூமியிலே என்ற மெட்டடில் )

ஏய்த்துப்பிழைக்கும் பூமியிலே
நேர்மை குறையும் காலத்திலே
அன்பு காட்டி நன்மை செய்து
சேவை செய்யும் பிள்ளை டாக்டர் (ஏய்த்து )

தன்னை அணுகும் மனிதருக் கெல்லாம்
தாயுள்ளம் கொண்டு சிகிச்சைகள் செய்வார்
மனித நேயம் மிகவே கொண்டு
அவரவர் குறைகளை பரிவுடன் கேட்பார்
முதுய வயதில் தனிமை வாட்டும்
நிலைமை அறிந்து உதவிட விழைந்தார் (ஏய்த்து)

முதியோர் மனமகிழ் மன்றத்தை அமைத்தார்
அதற்கோர் அரங்கத்தை அமைத்தும் கொடுத்தார்
முதியோர் எல்லாம் அரங்கத்தில் கூடி
கதைகளைப்பேசி களித்திடச் செய்தார்
பிறந்த நாளை பிள்ளை போலே
தான் கொண்டாடி அகமிக மகிழ்ந்தார் (ஏய்த்து)

சொந்த செலவில் படிப்பகம் அமைத்து
வந்து அமர்ந்து படித்திடச் செய்தார்
விதவிதமான போட்டிகள் நடத்தி
வயதை மறைந்து ஆடிடச் செய்வார்
சலிப்புத் தோன்றும் நிலையினை மாற்ற
பல்சுவை நிகழ்ச்சி பங்குடன் சேர்ப்பார் (ஏய்த்து )

உறுப்பினர்கள் பாடி அனைவர்களையும் மகிழ்வித்தனர்.
மன்ற உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபர் திருமதி .ராஜம் அவர்களுக்கு திரு.எம்.தெய்வசிகாமணிபரிசுகள் வழங்கினார்.
மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த திரு.ஆர்.நடராஜன் அவர்களுக்கு திரு. எஸ்.இராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.
இறுதியாக , டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

SBDC 47TH MEETING Dt 22.1.2017.

PHOTOS

SBDC 47TH MEETING Dt 22.1.2017. / Google Photos

 

 

47TH SBDC MEETING DT 22.01.2017 – VIDEOS.