SBDC-48TH MEETING DT 26.2.2017

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 48-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 26.02.2017 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

26.02.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.30மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவதுனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 48-வது மாதந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக, புது உறுப்பினர்களை மன்றத்தில்  அறிமுகம் செய்யப்பட்டு, அவர்கள் தன்னைப்பற்றி சில வார்த்தைகள் பேசினார்கள்.

            இரண்டாவது நிகழ்ச்சியாக, திரு.வி.மகாலிங்கம் உறுப்பினர், நகைச்சுவை நிபுணர்,TRIPLICANE HUMOUR CLUB SECRETARY  திரு.சேகரன், அவர்களை நமது டாக்டர். திரு.சி .வி.பிள்ளை அவர்களிடமும், உறுப்பினர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

   திரு. சேகரன்அவர்கள் தனது நகைச்சுவைப் பேச்சினால் ஒரு மணி நேரம் அனைத்து உறுப்பினர்களையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தார் .

            மூன்றாவது நிகழ்ச்சியாக, பெப்ரவரி மாத பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கீழ்க்கண்ட உறுப்பினர்களின் பிறந்த நாட்களை ஆடவருக்கு ராஜா மகுடம் சூட்டியும் ,பெண்டிருக்கு ராணி கிரீடம் அணிவித்தும், பூச்செண்டு வழங்கியும்,அவர்களுக்கு உபயோகமான ஒரு பரிசுப்பொருளையும் வழங்கி   கொண்டாடப்பட்டது.

  1. திரு.சி.தங்கராஜ் (15.02.1936).
  2. திரு.கே.சிவாஜி ( 18.02.1941).
  3. திருமதி. விசாலாட்சி (18.02.1944 ).

    பொதுவாக வெளியிலிருந்து வரும் பேச்சாளர்கள் தனது பேச்சை முடித்துவிட்டு உடனடியாகச் சென்றுவிடுவார்கள்.ஆனால் திரு.சேகரன் அவர்கள் எங்களது மன்ற கூட்டம் முடியும் வரை இருந்து, அனைத்து  நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனித்ததுடன் நமது மன்ற உறுப் பினர்களின் பிறந்தநாள் கொண்டாடுவதை மிகவும் பாராட்டியதோடல்லாமல், அவரது HUMOUR CLUB-ல் இந்தமாதிரி நடத்தலாமா என்பது பற்றி யோசிக்கிறேன் என்று பேசினார்.

            அதன்பின் மன்ற உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணிபரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு. எஸ்.இராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.

                         இறுதியாக , டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

SBDC 48TH MEETING DT 26.2.2017 – PHOTOS

SBDC-48TH MEETING DT 26.2.2017. / Google Photos

SBDC-48TH MEETING DT 26.2.2017- VIDEOS

https://www.youtube.com/watch?v=rPB1oSO4V4w