49TH SBDC MEETING DT 26.03.2017.

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 49-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 26.03.2017 ).

                உலக மகளிர் தினம் (8.3.2017), எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 49- வது மாதாந்திரக் கூட்டமானது  மார்ச் மாதம் என்பதால் , இக்கூட்டத்தில்  உலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதத்தில், அனைத்து நிகழ்ச்சிகளும் மகளிர்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது.

       26.03.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள, அரங்கத்தில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதத்தில் இந்த மன்றத்தின் 49-வது மாதந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக, வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையின் STAFF-க்காக ஒரு விளையாட்டு நடைபெற்றது.   

            அதாவது ஒரு TRAY -யில் 10 பஞ்சு உருண்டைகள் இருக்கும். பக்கத்தில் காலியான TRAY இருக்கும் .விளையாட்டில் கலந்து கொள்பவர், தனது மூக்கில் சிறிது GUM பூசி தனது மூக்கினால் TRAY -யில் இருக்கும் 10 பஞ்சு உருண்டைகளை ஒன்றொன்றாக எடுத்து பக்கத்தில் இருக்கும் காலியான TRAY -யில் போடவேண்டும். ஒரே நேரத்தில் இருவர் விளையாடுவார்கள். இருவரில் யார் அதிகமான பஞ்சு உருண்டைகளை TRAY -யில் நிரப்புவார்களோ அவர் வெற்றி பெற்றவர் ஆவார். கடைசியாக இருவர் இருக்கும் வரை, வெற்றி பெற்றவர்களுக்குள் விளையாட்டு நடக்கும்.

            மேற்கண்ட விதிகளின்படி , விளையாடிய விளையாட்டில் முதல் பரிசு திருமதி.சுகிர்தா அவர்களுக்கும், இரண்டாவது பரிசு செல்வி.பி.சத்யா அவர்களுக்கும் கிடைத்தது.

                                STAFF விளையாட்டு முடிந்ததும் அனைவரும் ஒரு திரைப்படப் பாடலை

அனைவரையும் மகிழ்வித்தனர்.

            இரண்டாவது நிகழ்ச்சியாக,

                  மகளிர்களுக்கான சமையல் போட்டி நடை பெற்றது.

அனைத்து ஆண் உறுப்பினர்களும் நடுவர்கள். அதாவது, இந்தப் போட்டியில் பங்கு பெற்ற 10 பெண்மணிகள், 1 முதல் 10 வரை எண்ணிட்ட பேட்ஜ்களுடன், ஸ்டேஜ்-க்கு வந்து, தான் சமையல் செய்த உணவு  பற்றிப் பேசி முடித்தவுடன் , அவர்கள் சமைத்துக் கொண்டுவந்த உணவின் SAMPLE- ஐ எல்லாருக்கும் வழங்குவார்கள். நடுவர்களான உறுப்பினர்கள் அனைவரும் அந்த  SAMPLE- ஐச் சுவைத்துப் பார்த்துவிட்டு , அவர்களுக்கு வழங்கப்பட்ட பேப்பரில் மதிப்பெண்களைக் குறிப்பிடுவார்கள்.

( Max.Marks: 10 )

அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற இருவருக்கு முதல் மற்றும் இரண்டாவது பரிசுகள் வழங்கப்படும்.

    1)  சமையல் போட்டியில், முதல் பெண்மணியாக 1-ஆம் எண் பேட்ஜ் அணிந்த திருமதி.கே.பகவதி சுந்தரி அவர்கள், தான் சமைத்த உணவாகிய ” குதிரைவாலி அரிசி உசிலி உப்புமா “ -வினை, அவர் எப்படிச் செய்தார் என்று தெளிவாக எடுத்துரைத்தவுடன் , அதன் SAMPLE அனைவருக்கும் வழங்கப்பட்டது.

                2)   இரண்டாவது  பெண்மணியாக 2-ஆம் எண் பேட்ஜ் அணிந்த திருமதி.சாரதாம்பாள் அவர்கள், தான் சமைத்த உணவாகிய ” குதிரைவாலி அரிசி பிசி பேலா பாத் “ -தினை, அவர் எப்படிச் செய்தார் என்று தெளிவாக எடுத்துரைத்தவுடன்,       அதன் SAMPLE அனைவருக்கும் வழங்கப்பட்டது.

      3)    மூன்றாவது பெண்மணியாக 3-ஆம் எண் பேட்ஜ் அணிந்த திருமதி.சுலோச்சனா அவர்கள், தான் சமைத்த உணவாகிய ” சாமை தர்பூஸ் கேசரி “ -யினை, அவர் எப்படிச் செய்தார் என்று தெளிவாக எடுத்துரைத்தவுடன், அதன் SAMPLE அனைவருக்கும் வழங்கப்பட்டது.

      4)  நான்காவது பெண்மணியாக 4-ஆம் எண் பேட்ஜ் அணிந்த திருமதி.பிரேமா அவர்கள், தான் சமைத்த உணவாகிய

“குதிரைவாலி பனை வெல்லம் கேக் “ -கினை, அவர் எப்படிச் செய்தார் என்று தெளிவாக எடுத்துரைத்தவுடன்  அதன் SAMPLE அனைவருக்கும் வழங்கப்பட்டது.

      5)   ஐந்தாவது பெண்மணியாக 5-ஆம் எண் பேட்ஜ் அணிந்த திருமதி.டி.ரேவதி தெய்வசிகாமணி  அவர்கள், தான் சமைத்த உணவாகிய “தினை கேரட் உருண்டை  “ – யினை, அவர் எப்படிச் செய்தார் என்று தெளிவாக எடுத்துரைத்தவுடன், அதன் SAMPLE அனைவருக்கும் வழங்கப்பட்டது.

      6)   ஆறாவது பெண்மணியாக 6-ஆம் எண் பேட்ஜ் அணிந்த திருமதி.டி.செல்வம் அவர்கள், தான் சமைத்த உணவாகிய “ராகி உருளைக்கிழங்கு ரோல் “ – ஐ  அவர் எப்படிச் செய்தார் என்று தெளிவாக எடுத்துரைத்தவுடன், அதன் SAMPLE அனைவருக்கும் வழங்கப்பட்டது.

      7)  ஏழாவது  பெண்மணியாக 7-ஆம் எண் பேட்ஜ் அணிந்த திருமதி.வி.முத்துலட்சுமி அவர்கள், தான் சமைத்த உணவாகிய “சிறு தானிய முருங்கைக்கீரை அடை “ – யினை, அவர் எப்படிச் செய்தார் என்று தெளிவாக எடுத்துரைத்தவுடன், அதன் SAMPLE அனைவருக்கும் வழங்கப்பட்டது.

      8)  எட்டாவது பெண்மணியாக 8-ஆம் எண் பேட்ஜ் அணிந்த திருமதி.ராஜம் புருஷோத்தமன்  அவர்கள், தான் சமைத்த உணவாகிய “சிறு தானிய உப்புக் கொழுக்கட்டை  “ – யினை, அவர் எப்படிச் செய்தார் என்று தெளிவாக எடுத்துரைத்தவுடன், அதன் SAMPLE அனைவருக்கும் வழங்கப்பட்டது.

      9)    ஒன்பதாவது  பெண்மணியாக 9-ஆம் எண் பேட்ஜ் அணிந்த திருமதி. சத்யவாணி அவர்கள், தான் சமைத்த உணவாகிய சாமை தக்காளி சாதம்  –  அவர் எப்படிச் செய்தார் என்று தெளிவாக எடுத்துரைத்தவுடன், அதன் SAMPLE அனைவருக்கும் வழங்கப்பட்டது.

      10) பத்தாவது பெண்மணியாக 10-ஆம் எண் பேட்ஜ் அணிந்த திருமதி. வசந்தா சிதம்பரம் அவர்கள், தான் சமைத்த உணவாகிய ” தினை நிலா   “ – வினை, அவர் எப்படிச் செய்தார் என்று தெளிவாக எடுத்துரைத்தவுடன், அதன் SAMPLE அனைவருக்கும் வழங்கப்பட்டது.

            உறுப்பினர்கள், தன்னிடம் வழங்கப்பட்ட பேப்பரில் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் வழங்கிய மதிப்பெண்களை  வைத்து கணக்கிட்டதில்,

முதல் பரிசு திருமதி .வசந்தா சிதம்பரம் அவர்களுக்கும் ,

இரண்டாவது பரிசு திருமதி.ராஜம் புருஷோத்தமன் அவர்களுக்கும்

 வழங்கப்பட்டன .

            மூன்றாவது நிகழ்ச்சியாக,

      நமது டாக்டர் சி.வி.பிள்ளை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது மன்றத்திற்கு வருகை தந்த ” WELL DRESSED WOMEN ”  போட்டியின் நடுவர் டாக்டர் விஜயலட்சுமி அவர்களுக்கு கரகோஷமான வரவேற்பு வழங்கப்பட்டது.

      டாக்டர் விஜயலட்சுமி அவர்கள் மகளிர் தினத்தைப் பற்றியும் , பெண்களைப் பற்றியும் தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சரளமாகப் பேசி அனைவரையும் கவர்ந்தார்.

      ” WELL DRESSED WOMEN ”  போட்டியில் பங்கு பெற்றவர்கள் 20 பேர். இந்த போட்டிக்கு நடுவர் டாக்டர் விஜயலட்சுமி அவர்கள் .

       நமது மன்ற உறுப்பினர் புலவர் திரு.வி.மணிவாசகம் ஒவ்வொரு பெண்மணியையும், மேடைக்கு அழைக்கிறபொழுது, யாரும் நினைக்க முடியாத அளவுக்கு அவர்களை அடைமொழிகளால் கூப்பிட்ட விதம், மன்றக் கூட்டத்தில் இருந்த அனைவரையும் பிரமிக்க வைத்தது.

                மேடைக்கு வருகின்ற பெண்மணி ,அங்கு உள்ள TRAY- யிலிருந்து, தான் எடுத்த துண்டுச் சீட்டில் உள்ள வினாவிற்கு விடைகளைக் கூறி , FASHION SHOW- ல் நடப்பது போல் நடந்து காட்டவேண்டும்.

  திரு.வி.மணிவாசகம் அவர்கள் ” WELL DRESSED WOMEN ”  போட்டியில் பங்கு பெற்றவர்களை ஒவ்வொருவராக , மேடைக்கு அழைத்த விதம் :-

1) திருமதி.டி.செல்வம் .

இவர் பெயருக்கு – அழகு, வளம், ஐசுவர்யம் என்று பொருள்.

ஸ்ரோதஸ்வினி என்ற இசைக்குழுவின் நிறுவனர்.

இவர் தைரியம் ,துணிவு, BOLDNESS, உடையவர்.

ஆனாலும் ஈகோ இல்லாதவர்.

எஸ்.பி.டி.சி- யின் ” கிரண்பேடி “. அவர்களே வருக, வருக, என அழைக்கிறோம்.

2) திருமதி.வசந்தா சிதம்பரம் .

அறிவுத்திறன் மிக்கவர். ஒளஷதமாய் இருப்பவர் என டாக்டர் அவர்களை அகரம் முதல் ஒளகாரம் வரை புகழ்ந்து கவிதை பாடியவர்.

மாடித் தோட்டம் கண்ட மாமணியே வருக, வருக, என அழைக்கிறோம்.

3) திருமதி.டி.ரேவதி தெய்வசிகாமணி.

தெய்வ நம்பிக்கையுடையவர். சஷ்டியப்த பூர்த்திக்கான வயதுடையவர்.

27-வது நட்சத்திர பெயரையுடையவர். ஆதலால் நட்சத்திர நாயகியே வருக, வருக, என அழைக்கிறோம்.

4) திருமதி.கே.பகவதி சுந்தரி .

அறிவியல்துறை பேராசிரியர். எஸ்.பி.டி.சி-யின் நிர்வாகக் குழு உறுப்பினர்.

இருமொழி வல்ல பேச்சாளர். இவரது பேச்சில் எளிமை ,இனிமை, LOGIC, முக்காலத்தோடும் பொருத்திப் பேசுபவர். ஆதலால், இயங்கிய , இயங்குகின்ற  இயங்கும்  சக்தியே வருக, வருக, என அழைக்கிறோம்.

5) திருமதி. பி.ராஜம் புருஷோத்தமன்.

ஒரே மாதத்தில் பிறந்த நாள் கொண்டாடும் தம்பதியினர்.

மருத்துவமனையை திருக்கடையூர் எனப் புகழ்ந்தவர்கள்.

எஸ்.பி.டி.சி-யில் “நாங்க புதுசாக் கட்டிகிட்ட ஜோடி தானுங்க ! ”  எனப் பாடி ஆடியதால் வானம்பாடியே வருக, வருக, என அழைக்கிறோம்.

6) திருமதி.ஜி.கோமதி கணேசன்.

இவர் பெயரின் முன்பாதி பசு, மற்றும் அரசனைக் குறிக்கும்.

பின்பாதி நிலவு எனப் பொருள்படும்.

ஆனால் இவரோ, நிலவே என்னிடம் நெருங்காதே, நீ நினைக்கும் இடத்தில்  நான் இல்லை எனப்  பாடி மகிழ்வித்ததால், நிலவுப்  பாடகியே வருக, வருக, என அழைக்கிறோம்.

7) திருமதி. வி.முத்துலட்சுமி .

SBDC நிறுவனர் – ஆஸ்தானப் பேச்சாளி என்பார்,

மகன் – ஜல்லிக்கட்டு காளை என்பார்.

நாங்கள்- சாதித்த / சாதிக்கிற / சாதிக்கத் துடிக்கும் பெண்மணி என்போம். சாதனை புரியும் லட்சியப் பெண்மணியே வருக, வருக, என அழைக்கிறோம்.

8) திருமதி. எல்.சத்யவாணி.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்று பாடியவருக்கு உரிமைக்காரர்.

எப்போதும் துணைவருடன் இணைந்தே காட்சி தருவார்.

SORRY  என்பதை புன்சிரிப்போடு கூறுவதால் புன்னகை அரசியே வருக, வருக, என அழைக்கிறோம்.

9) திருமதி. பி.சாரதாம்பாள்.

டாக்டர் பிள்ளை அவர்களின் உடன்பிறவா சகோதரி.

சிவன் பெயரிலே வாழும் மாலி என்பவரின் மனைவி.

சரஸ்வதி, பார்வதியின் பெயரைக் கொண்டதால் அன்புத் தாயே வருக, வருக, என அழைக்கிறோம்.

10) திருமதி. எஸ்.சுலோச்சனா.

இசை, ஓவியத்தில் ஈடுபாடு உடையவர்.

ரங்கோலியில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

மடிப்பாக்கத்திலிருந்து வருவதால் மடிப்பாக்கம் மாமியே

வருக, வருக, என அழைக்கிறோம்.

11) திருமதி. ஆர்.பிரேமா.

தெய்வ நம்பிக்கை உடையவர்.

ஆன்மீகச் சுற்றுலா செல்வதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

பயண ஏற்பாடு செய்வதில் ஆர்வம் உடையதால் சுற்றுலாச் செம்மலே

 வருக, வருக, என அழைக்கிறோம்.

12) திருமதி. எஸ்.சித்ரா தேவி .

எஸ்.பி.டி.சி -யின் C.E.O பெயரைத் தன் பெயரில் முற்பாதியாகக் கொண்டவர்.

இவர் கணவர் பெயரின் முற்பாதி செல்வம் எனவும் ,பிற்பாதி இளங்குமரன் எனவும் பொருள்படும்.

இவரைச்  செல்வ இளங்குமரனை அலங்கரித்த நாயகியே வருக, வருக, என அழைக்கிறோம்.

13) திருமதி. எஸ்.ராஜலக்ஷ்மி.

புத்தகம் படிப்பதைப் பொழுது போக்காகக் கொண்டவர்.

இவர் கணவர் கோர்ட்டில் வாதிடுவார்.

இவர் குரோம்பேட்டை வீட்டில் துணை புரிவார்.

மோடி கூறினாராம் ONE DAUGHTER EQUALS FIVE SONS – என்று.

இவர் 20 மகன்களுக்கு இணையான நான்கு பெண் பிள்ளைகளைப் பெற்ற

பெருந்தேவியாரே வருக, வருக, என அழைக்கிறோம்.

14) திருமதி. சந்திரகலா.

இசையில் ஈடுபாடு உடையவர்.

வைரவிழா கொண்டாடுகிற  75 வயது நிரம்பியவர்.

பள்ளிக்கரனையிலிருந்து பவனி வரும் சந்திரகலாவே வருக, வருக, என அழைக்கிறோம்.

15) திருமதி. லக்ஷ்மி நடராஜன்.

இவர் செல்வத்திற்கு அதிபதி.

இவர் கணவர் தில்லை எனப்படும் சிதம்பரத்திற்கு அதிபதி.

இவர் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதால் , புத்தாண்டு பொன்மகளே வருக, வருக, என அழைக்கிறோம்.

16) திருமதி. உமாதேவி.

பாடறியேன், படிப்பறியேன்,பள்ளிக்கூடம் நானறியேன் என்பது போல

மேடை ஏறியதில்லை ,மைக்கில் பேசியதுமில்லை, எனக்கூறி

டாக்டர் அவர்களே பாராட்டும்படி, ஓகோ எனப்பேசியதால்,

இவரை பேச்சுத் திறனுள்ள மங்கையே வருக, வருக, என அழைக்கிறோம்.

17) திருமதி. விசாலாட்சி.

யோகாவில் ஆர்வமுடையவர். வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையில்

மிகுந்த ஈடுபாடு உடையவர். கங்கைக் கரையில் அமர்ந்து ஆட்சி புரிபவர் .

தியாக உணர்வுடையவர். காரணம் .நான்கு நாத்தனாரை உடையவர்.

ஆதலால் தியாக அருட் செம்மலே வருக, வருக, என அழைக்கிறோம்.

18) திருமதி. சகுந்தலா.

கட்டிடக் கலை வல்லுனரின் துணைவியார்.

மகன்.மகள், இருவரையும் வேறுபாடில்லாமல் கருதுபவர் .

ஆதலால் இவரை சமத்துவ நாயகியே, சகுந்தலாவே வருக, வருக, என அழைக்கிறோம்.

 

நான்காவது நிகழ்ச்சியாக ,

      பெண்களின் பெருமையைப் போற்றுவோம் என்பதை ஒரே வரியில்

எழுதும் போட்டி.

முதல் பரிசு : திரு. வீரராகவன்.

அவர் எழுதிய வரி : IN FEMALE MALE IS INCLUDED .WITHOUT FEMALE NO MALE.

இரண்டாவது பரிசு: திரு.வி.மணிவாசகம்.

அவர் எழுதிய வரி : உலகில் உடல் , உயிர் , உள்ளம் , உணர்வு என யாதுமாய்  

                       நிற்பவள் பெண்.

ஐந்தாவது நிகழ்ச்சியாக ,

மார்ச் மாத பிறந்த நாள் கொண்டாட்டம் :

        கீழ்க்கண்ட உறுப்பினர்களின் பிறந்த நாட்களை ஆடவருக்கு ராஜா மகுடம் சூட்டியும் ,பெண்டிருக்கு ராணி கிரீடம் அணிவித்தும், பூச்செண்டு வழங்கியும், அவர்களுக்கு உபயோகமான ஒரு பரிசுப்பொருளையும் வழங்கி   கொண்டாடப்பட்டது.

  1. திருமதி . டி.செல்வம் (23.03.1943).
  2. திரு. பி.சுந்தரராஜன் (26.03.1947 ).
  3. திரு. வி.மணிவாசகம் ( 16.03.1956 ).
  4. திருமதி .டி.ரேவதி            (18.03.1957).

      திருமதி. சித்ரா பிள்ளை, CEO, SBDC அவர்களுக்கு ராணி கிரீடம் அணிவித்தும், பூச்செண்டு வழங்கியும், அவர்களுக்கு சால்வை அணிவித்தும், கமிட்டி உறுப்பினர்களால் ஒரு நினைவுப் பரிசும் கொடுக்கப் பட்டது.    

ஆறாவது நிகழ்ச்சியாக ,

      மன்ற உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி SPONSOR  பண்ணிய லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த திருமதி.சத்யவாணி அவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.

மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் SPONSOR  பண்ணிய  லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த திரு.எம்.தெய்வசிகாமணிக்கு பரிசு வழங்கப் பட்டது.

       இறுதியாக , டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

SBDC-49TH MEETING DT 26.3.2017- I FINAL / Google Photos
SBDC-49-DT 26.3.2017- CEO & STAFF IN KERALA DRESS. / Google Photos
11 new photos added to shared album / Google Photos

 

SBDC-49TH MEETING  VIDEOS

 

SBDC-49TH MEETING DT 26.3.2017 PART II-COOKERY COMPETITION

SBDC 49TH MEETING DT 26.3.2017 VIDEO PART III ( REVISED )

 

SBDC 49TH MEETING DT 26.3.2017 VIDEO PART IV ( REVISED )

SBDC 49TH MEETING DT 26.3.2017 VIDEO PART V   ( REVISED )