IV ANNIVERSARY DT 23.4.2017

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 50-வது மாதாந்திரக் கூட்டம் மற்றும் நான்காவது ஆண்டுவிழா  நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 23.04.2017 ).

                எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 50- வது மாதாந்திரக் கூட்டம் மற்றும் நான்காவது ஆண்டுவிழா, வேளச்சேரியில் அமைந்திருக்கும் அடையாறு ஆனந்தபவன் , சப்தகிரி அரங்கில்   23.04.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 3.15 மணியளவில் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

                திரு.வி.மணிவாசகம் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.

முதல் நிகழ்ச்சியாக,  

            திரு.வி.மகாலிங்கம் அவர்கள் நான்காவது ஆண்டுவிழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்கள்.

இரண்டாவது நிகழ்ச்சியாக,

            எஸ்.பி.டி.சி நிறுவனர் , C.E.O, விழாக்குழுவினர் அனைவரும் சேர்ந்து நான்காவது ஆண்டுவிழாவின் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

மூன்றாவது நிகழ்ச்சியாக,

            எஸ்.பி.டி.சி தலைவர், திரு.எம்.ராஜாமணி அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள். தலைமையுரையில் மார்ச்’ 2016 முதல் ஏப்ரல்’2017 வரை நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் மிகத்தெளிவான முறையில்   எடுத்துக் கூறப்பட்டது.  

நான்காவது நிகழ்ச்சியாக,

      50-வது மாதாந்திரக் கூட்டத்தினையே நான்காவது ஆண்டுவிழாவாகக் கொண்டாடுவதால் , 50-க்கு 48  மாதந்திரக் கூட்டங்களில் கலந்துகொண்ட திரு.முஹம்மது மாதார் – அவர்களை கெளரவிக்கும் பொருட்டு, அன்னாரை வைத்து கேக் cut- பண்ணி அனைவராலும் கொண்டாடப்பட்டது.  

      திரு.முஹம்மது மாதார் அவர்களுக்கு நினைவுப்பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது.

ஐந்தாவது நிகழ்ச்சியாக,

      உறுப்பினர்களின் ஏப்ரல் மாத பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

      ஏப்ரல் மாத பிறந்தநாள் குழைந்தைகள்:-

  1. திரு.டி.எஸ். ராஜப்பா.  (28.04.1934).
  2. திருமதி . எஸ். சுலோச்சனா . (23.04.1951).
  3. திரு.ஆர்.பாலசுப்ரமணியன். (29.04.1951).
  4. திரு.இ.சுப்பையா .                            (06.04.1952).
  5. திரு.எஸ்.ஆர்.புருஷோத்தமன். (30.04.1954).
  6. திரு.ஆர்.அறிவுடைநம்பி. (27.04.1955).
  7. திருமதி.பி.ராஜம் . (20.04.1962).
  8. திருமதி.சாந்தகுமாரி. ( 02.04.1964).

 ஆறாவது நிகழ்ச்சியாக,

       4- வது ஆண்டு மாதாந்திரக் கூட்டங்களில் , அதிகமான கூட்டங்களில் கலந்து கொண்ட 18 உறுப்பினர்களுக்கு நினைவுப்பரிசுகள்  வழங்கி, கௌரவிக்கப்பட்டார்கள்.

      மாதாந்திரக் கூட்டங்களில் , அயராது உழைத்த எஸ்.பி.டி.சி  STAFF – களுக்கு நினைவுப்பரிசுகள்  வழங்கி, கௌரவிக்கப்பட்டது.   

      டாக்டர் மீனா அவர்கள் , நமது நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அவர்களுக்கு நன்றி செலுத்தும்வகையில் ஒரு பரிசு அளித்தார்கள்.

 ஏழாவது நிகழ்ச்சியாக,

                திருமதி.லலிதா கணபதி அவர்கள் நடத்தி வரும் ஸ்ரீ நூப்ராலயா நாட்டியப்பள்ளியின் மாணவிகளுடைய, சிறப்பான பரதநாட்டியம் நடைபெற்றது. விநாயகர் பாட்டு முதல் தில்லானா பாட்டு வரை 13 பாட்டுகளுக்கு வெகு சிறப்பாக நடனம் ஆடி அனைவரின் கை தட்டலையும் பெற்றார்கள்.

எட்டாவது நிகழ்ச்சியாக,

      திருமதி.பானுமதி குழுவினரின் சிறப்பான LIGHT MUSIC நடைபெற்றது.

எம்.ஜி .ஆர். , ரஜினி  போன்ற வேஷம் போட்டு ஆடிய நபர் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

மற்ற நிகழ்ச்சிகள்:-

      உறுப்பினர் திரு.பிச்சை அவர்கள் தன் மனைவியுடன் வந்து, நமது நிறுவனருக்கும் , சி.இ.ஓ -க்கும் பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தனர்.

      நமது விருந்தினர் டாக்டர் திருமதி.விஜயலட்சுமி அவர்களுக்கு , நிறுவனர்  டாக்டர் திரு.சி.வி.பிள்ளை அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

      நமது எஸ்.பி.டி.சி.யின் நிகழ்ச்சிகள் அனைத்தும் , அவ்வப்பொழுது sbdcseniorsclub.in  மூலம் உலகமெங்கும் பறைசாற்றிட, உதவி செய்த நமது

WEB DESIGNER  திரு.கந்தசாமி அவர்களுக்கு, நிறுவனர்  டாக்டர் திரு.சி.வி.பிள்ளை அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

      குலுக்கல் சீட்டில் , முதலில், 25GM வெள்ளிக்கு உண்டான மூன்றாவது பரிசு திரு.பாலையன் அவர்களுக்கு விழுந்தது.  

      குலுக்கல் சீட்டில் , இரண்டாவதாக, 1/2 கிராம்  தங்கத்திற்கு  உண்டான இரண்டாவது பரிசு திருமதி . சகுந்தலா பிச்சை  அவர்களுக்கு விழுந்தது.                          

      குலுக்கல் சீட்டில் , மூன்றாவதாக, 1  கிராம் தங்கத்திற்கு  உண்டான முதல்  பரிசு திரு.முஹம்மது மாதார்   அவர்களுக்கு விழுந்தது. 

      இந்த நான்காம் ஆண்டுவிழாக் கூட்டத்தில் , நமது நிறுவனர் டாக்டர் .சி.வி.பிள்ளை அவர்கள் , JAWAN FUND –ஐ ஆரம்பித்து வைத்தார்கள்.

கடைசி நிகழ்ச்சியாக   

 நமது நிறுவனர் டாக்டர் .சி.வி.பிள்ளை அவர்கள்  அனைத்து தரப்பினர்களுக்கும் நன்றி கூற, திரு.வி.மணிவாசகம் அவர்கள் ,டாக்டரின் நன்றிக்கு நன்றி கூறி நான்காவது ஆண்டுவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக முடிவடைந்தது.           

 

IV ANNIVERSARY DT 23.4.2017 –  PHOTOS.  PART I        

 

IV ANNIVERSARY PHOTOS PART I / Google Photos

 

 IV ANNIVERSARY DT 23.4.2017 –  PHOTOS.  PART II  

 

IV ANNIVERSARY PART II PHOTOS / Google Photos

  IV ANNIVERSARY DT 23.4.2017 –  VIDEO  PART I  

 SBDC – IV ANNIVERSARY  dt 23.04.2017 – VIDEO PART II

 

 SBDC IV ANNIVERSARY dt 23.04.2017 -VIDEO PART III — DANCE- 1.

 SBDC IV ANNIVERSARY dt 23.04.2017 -VIDEO PART IV — DANCE- 2..

 

 SBDC IV ANNIVERSARY PART V -DANCE 3 & LIGHT MUSIC

 

 SBDC IV ANNIVERSARY –  PART VI  & LAST – MUSIC & OTHERS