SBDC 51ST MEETING

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 51-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 28.05.2017 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

28.05.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.30மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவதுனையிலுள்ள

அரங்கத்தில் இந்த மன்றத்தின் 51-வது மாதந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக, நமது உறுப்பினர் திரு.முகம்மது மாதார் அவர்களின் மறைவுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

            இரண்டாவது நிகழ்ச்சியாக, மேஜிக் நிபுணர் திரு.ராஜா சுதாகர் அவர்களின் மேஜிக் show நடைபெற்றது.உறுப்பினர்கள் அனைவரும்  மிகவும் ரசித்தனர்.

            மூன்றாவது நிகழ்ச்சியாக, நமது உறுப்பினர் திரு.வி.மணிவாசகம் அவர்கள் மாணவர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து ரூபாய் ஐந்து லட்சம் பெற்றமைக்கு, அன்னாரைப்  பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

            நான்காம் நிகழ்ச்சியாக மே மாத பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி, இதுநாள்வரை நடைபெற்றதிலிருந்து சிறிது வித்தியாசமாக நடத்தப்பட்டது.

கீழ்க்கண்ட உறுப்பினர்களின் பிறந்த நாட்களை ஆடவருக்கு ராஜா மகுடம் சூட்டியும் ,பெண்டிருக்கு ராணி கிரீடம் அணிவித்தும், பூச்செண்டு வழங்கியும்,அவர்களுக்கு உபயோகமான ஒரு பரிசுப்பொருளையும் வழங்கி, HAPPY BIRTHDAY என்ற எழுத்துடன் கூடிய    SASHஉடன் ( ஒரு தோளில் அணிந்து  ) கொண்டாடப்பட்டது.

  1. திரு.என்.கணேசன்   (21.05.1943).
  2. திரு.வி.மகாலிங்கம்  ( 03.05.1944).
  3. திரு.எம்.தெய்வசிகாமணி ( 23.05.1949 )
  4. ஜி.சிதம்பரம் ( 29.05.1949 )
  5. திருமதி. சாந்தி (17.05.1959 ).

            எல்லாவற்றிக்கும் மேலாக நமது மன்ற நிறுவனர் டாக்டர் .சி.வி.பிள்ளை அவர்களின் பிறந்த நாளை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

            அதன்பின் மன்ற உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணிபரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு. எஸ்.இராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.

                         இறுதியாக , டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

SBDC 51ST MEETING DT 28.05.2017 – PHOTOS

 

51st SBDC MEETING DT 28.05.2017. / Google Photos

 

 SBDC  51st MEETING dt 28.5.2017 – VIDEO PART I

 SBDC  51st MEETING dt 28.5.2017 – VIDEO PART II