SBDC 52nd MEETING dT 25.6.2017

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 52-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 25.06.2017 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

25.06.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவதுனையிலுள்ள

அரங்கத்தில் இந்த மன்றத்தின் 52-வது மாதந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக, நமது டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ இது உங்கள் நேரம்’ புதிதாக இந்தக்கூட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

            திரு.செல்வராஜ், திரு. சிவராமசேது, திரு. தங்கராஜ் , திரு.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

            இரண்டாவது நிகழ்ச்சியாக , கேரளா அமுர்தா டிவி புகழ்

திருமதி.அனிலா ராஜீவ் அவர்களது கரோக்கி நிகழ்ச்சி நடைபெற்றது. மிகவும் இனிமையான பாடல்களைப் பாடி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். திரு. வெங்கட் ராமன் அவர்களின் பாட்டுக்கள் அனைவரின் கைதட்டலைப் பெற்றார்.

கரோக்கி நிகழ்ச்சியின் இடையில் கீழ்க்கண்ட உறுப்பினர்களின் ஜூன் மாத பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

  1. திரு.இராமலிங்கம்.
  2. திரு.ராஜாமணி.
  3. திரு.ஸ்ரீதர்.

பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் , மறுபடியும் கரோக்கி பாட்டு நிகழ்ச்சி தொடரப்பட்டது. உறுப்பினர்கள் பலபேர் சிறப்பாக நடனம் ஆடி அவர்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

      திரு.சேகரன் , நகைச்சுவை மன்றம், திருவல்லிக்கேணி அவர்கள் ,மற்றும் திரு வி.மகாலிங்கம், நமது மன்ற உறுப்பினர்  இருவரும் கரோக்கி நிகழ்ச்சியில் பங்கு கொண்ட திருமதி.அனிலா ராஜீவ்-ஐயும், திரு.வெங்கட் ராமன் இருவரின் திறமைகளைப் பாராட்டிப் பேசினார்.

      திருமதி.அனிலா ராஜீவ், திரு.வெங்கட் ராமன் இருவருக்கும்

பொன்னாடை போர்த்தி , நினைவுப்பரிசுக் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

            அதன்பின் மன்ற உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணிபரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு. எஸ்.இராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.

                         இறுதியாக , டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

SBDC 52ND MEETING DT 25.6.2017 – PHOTOS

SBDC 52nd MEETING DT 25.6.2017 / Google Photos

SBDC 52ND MEETING DT 25.6.2017 -VIDEO PART I

 

SBDC 52ND MEETING DT 25.6.2017 VIDEO PART II

 

SBDC 52ND MEETING DT 25.6.2017 VIDEO PART III – KARAOKE I

 

SBDC 52ND MEETING DT 25.6.2017 VIDEO PART IV – KARAOKE II

SBDC 52ND MEETING DT 25.6.2017 VIDEO PART V – KARAOKE III + OTHERS