SBDC 53RD MEETING DTB 23.07.2017

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 53-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 23.07.2017 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

23.07.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள

அரங்கத்தில் இந்த மன்றத்தின் 53வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக, நமது டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘மாதமொரு திருக்குறள் ‘

என்ற தலைப்பில் திரு.வி.மணிவாசகம் அவர்கள்

” அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ;

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.”

என்ற 72-வது குறளை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்.

            இரண்டாவது  நிகழ்ச்சியாக,  இது உங்கள் நேரம்

நிகழ்ச்சியில் ,

            திரு.டி.எஸ்.கணேசன், திரு.சி.ஆர்.சேஷாத்ரி ,

திரு.எம்.பாலையன் ,திரு.ஆர்.வீரராகவன் ஆகியோர் பேசினார்கள்.

           மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

            ஜூலை மாத விளையாட்டாக ,JUMBLING TOWER, A GAME OF STRATEGY AND NERVES WITH 48 WOOD PIECES, ஏ அணி ,பி அணி என்று பிரித்து ஏ அணியினர் பச்சை நிற ரிப்பன் அணிந்தும், பி அணியினர் சிவப்பு நிற ரிப்பன் அணிந்தும் விளையாடினர்.

            வெற்றி பெற்ற ஏ அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.         

நான்காவது   நிகழ்ச்சியாக,  

கீழ்கண்ட நபர்களுக்கு , ஜூலை மாத பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

  1. திரு.எம்.பாலையன்.
  2. 2. திரு.எம்.பரவசராஜு.
  3. திரு.ஆர்.வீரராகவன்.
  4. திரு.டி.எஸ்.வெங்கடரமண ராவ் .
  5. திரு.ஆர்.நடராஜன் .
  6. திருமதி.கே.பகவதி சுந்தரி .
  7. திரு. கே.சுந்தரேசன் .
  8. திரு. எம்.நடராஜன் .

                  அதன்பின் மன்ற உறுப்பினர் ரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணிபரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு. எஸ்.இராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.

                         இறுதியாக , டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

SBDC 53RD MEETING ON 23.07.2017. PHOTOS

 

SBDC 53RD MEETING ON 23.7.2017. / Google Photos

SBDC 53RD MEETING VIDEOS  PART I