SBDC 54TH MEETING DT 20.08.2017

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 54-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 20.08.2017 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி திருமதி.சித்ரா அவர்களாலும்  ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

20.08.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள

அரங்கத்தில் இந்த மன்றத்தின் 54வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக,”இது உங்கள் நினைவுக்காக ” நிகழ்ச்சியில் ,53வது கூட்டத்தில் (ஜூலை’ 17 ) நடைபெற்ற அனைத்து விபரங்களையும் திரு.ராஜாமணி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு , 10 நிமிட வீடியோவும் போட்டுக்காட்டப்பட்டது.

      இரண்டாவது நிகழ்ச்சி ,நமது மன்றத்தின் மிகப்பெரிய சுதந்திரச்  சிறப்பு நிகழ்ச்சியாக , இந்த மன்றத்தின் committee உறுப்பினர்களால் ,பாரதவிலாஸ் சினிமாவிலுள்ள , ‘இந்தியநாடு என் வீடு’ என்ற பாட்டுக்காக, 12 பேர்கள், அந்த சினிமாவில் நடித்தவர்களின் வேஷங்களைப் போட்டு அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்துக்காட்டி, அனைவரின் கைதட்டலையும் பெற்றனர்.    

      நமது பாரதக் கொடியினைப் பிடித்துக்கொண்டு நின்ற பாரதமாதா அசல் பொம்மையாகவே நின்று இந்த சிறப்பு நிகழ்ச்சியினை மிகச் சிறப்பாக அமையும்படிச் செய்துவிட்டார்.

இது, நமது மன்றம் முதல் கட்ட பெரிய மைல் கல்லை தாண்டியிருக்கிறது என்பதற்கு மிகப்பெரிய சான்று.

    மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

இது உங்கள் நேரம் நிகழ்ச்சியில் , திருமதி.செல்வம்,

திருமதி. அகிலா , அவர்கள் சிறப்பாகப் பேசினார்கள். திருமதி.ருக்மணி அவர்கள் ஒரு சிறப்பான கவிதையினைப் படித்துக் காட்டினார்கள்.

            ருக்மணியின் கவிதை :

கவிதையை பத்திரமாய் பெற்றெடுக்க கைகொடுக்கும் மருத்துவனே ஒரு கவிஞன் .

கவிஞனுக்கு ஒரு கவதை என்பது அதிகமாய் தெரிந்தாலும் நன்றி மறப்பது நன்றல்லவே,

அவன் நாடி பிடித்தே நோய் நாடி நோய் நாடும் வித்தைக்காரன்

சுவாசம் வைத்தே நம் புவியில் வாசம் சொல்லும் பேரறிஞன்

தனக்கென உண்டொரு குடும்பம் என்பதை மறந்து போனவன்

ஊருக்கே அல்சர் வகுப்பெடுக்கும்

அவன் உண்ணாமல் விட்ட பொழுதுகள் ஆயிரம்.

கொள்ள நோயோ ,மாபெரும் விபத்தோ கடவுள் வருவதற்கு கால் மணி நேரத்திற்கு முன்பே காற்றென புகுவான்.

தன் குழந்தையைக் கொஞ்சினோகொஞ்சினனோ , இல்லையோ

ஊர் பிள்ளை பிழைத்திருக்க உயிரைக் கொடுத்தவன்

வண்டி இயங்கும்போதே என்சினை பிரித்து சரி செய்து

மாட்டும் மானிட மெக்கானிக்  நிபுணன் அவன்.

அதன் பின்,

திருமதி.சுலோச்சனா அவர்கள் ஒரு பாடலை மிகவும் சிறப்பாகப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

 

            நான்காவது  நிகழ்ச்சியாக, நமது டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘மாதமொரு திருக்குறள்

என்ற தலைப்பில் திரு.வி.மணிவாசகம் அவர்கள்,

“சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்த்தரும் நோய் . “

என்ற 359-வது குறளை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்.

            ஐந்தாவது  நிகழ்ச்சியாக,  சிறப்புப் பேச்சாளர், பேராசிரியர். திரு. சிவ செல்வகுமார், M.A; M.PHIL ;M.A, B.Ed; D.E.S.A,DSS; PGDCA; PGJMC. அவர்கள் “மனிதநேயம்” என்ற தலைப்பில் சிறப்பானச் சொற்பொழிவினை நிகழ்த்தி அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். .

திரு.சிவ செல்வகுமார் பற்றிய சில வார்த்தைகள் :

உலக மக்களின் அன்பின் ஆலமரமாய்த் திகழும் அன்னை தெரசாவின் திருப்பெயரால் 2004 –ஆம் ஆண்டு முதல் கல்விக் கழகமொன்றைக் கண்டு அதன் வாயிலாக அறிஞர் பெருமக்களை எல்லாம் ஓன்று கூட்டி , போற்றியும், புகழ்ந்துரைத்தும் ,மாற்றுதிறனாளிகளின் குழந்தைகளைக் காக்கும் கரங்களாய்.., ஆதரவற்ற குழைந்தைகளை , ஏழை எளிய குடும்பத்தினரின் குழந்தைகளைக் காக்கும் காவலனாய் …, மாநிலம் எங்கும் சென்று வார விடுமுறை நாட்கள் , மற்றும் ஒய்வு நேரங்களில் வீதிகளில் அமர்ந்து ,

வருவோர், போவாரின் காலணிகளைச் சுத்தம் செய்து ,அதன் வாயிலாக, சமூகப்பணியாற்றும்  சமூகநீதிக் காவலர்.

            ஆறாவது நிகழ்ச்சியாக ,.

கீழ்கண்ட நபர்களுக்கு , ஆகஸ்ட் ‘17 மாத பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

  1. திரு.ஆர்.சூரிய நாராயண ராவ் .
  2. 2. திரு.வி.செல்வராஜ் .
  3. திரு.சி.வி.நடராஜன் .
  4. திரு.வி.தேவராஜு .
  5. திருமதி.பி.சகுந்தலா .

                 அதன்பின் மன்ற உறுப்பினர் ரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணிபரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு. எஸ்.இராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.

                 

   1) சுதந்திர  சிறப்பு நிகழ்ச்சிக்காக , பலமுறை முயற்சி செய்து மிகவும் கஷ்டப்பட்டு பெரிய அளவில் உள்ள இந்தியா MAP கொண்டு வந்து விழாவினைச் சிறப்பிக்கசெய்தமைக்காக, நமது டாக்டர்  சி.வி..பிள்ளை  திரு.மணிவாசகம் அவர்களை மிகவும் பாராட்டினார்கள்.

2) இந்தியா படத்தைக் கொண்டுவந்தவர் திரு . மனிவாசகமாக இருந்தாலும் , அதனைக் கஷ்டப்பட்டு சரியாக மாட்டி , DECORATE

பண்ணியது திரு.தெய்வசிகாமணி, திரு.விஸ்வநாதன் & மணிவாசகம் அவர்கள் தான். ஆகவே, அவர்கள் கஷ்டப்பட்டதற்கு

நமது நிறுவனர்.டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள், மேற்கண்ட நபர்களை பெரிதும் பாராட்டினார்கள்.

      இது உங்கள் நேரம்த்தில் கடைசி நேரத்தில் பேசவேண்டும் என்ற விருப்பம் தெரிவித்ததனால் , திரு.பாலசுந்தரம் அவர்களும் ,  மற்றும் திருமதி.வி.முத்துலட்சுமி அவர்களும் பேசி அனைவரின் கைதட்டலையும் பெற்றார்கள்.

       இறுதியாக , டாக்டர்.சி.வி.பிள்ளை அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

sbdc 54th meeting dt 20.8.2017photos final / Google Photos