SBDC 55TH MEETING DT 17.09.2017

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 55-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 17.09.2017 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி திருமதி.சித்ரா அவர்களாலும்  ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

17.09.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள

அரங்கத்தில் இந்த மன்றத்தின் 55வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக,”இது உங்கள் நினைவுக்காக ” நிகழ்ச்சியில் ,54வது கூட்டத்தில் (ஆகஸ்ட்’ 17 ) நடைபெற்ற அனைத்து விபரங்களையும் திரு.ராஜாமணி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு , 10 நிமிட வீடியோவும் போட்டுக்காட்டப்பட்டது.

      இரண்டாவது நிகழ்ச்சியாக  ,

இது உங்கள் நேரம் நிகழ்ச்சியில் ,

திரு.நாராயணன்,

திரு.பாலசுப்ரமணியன்,

திரு,புருஷோத்தமன், மற்றும்

திரு.பாலசுந்தரம் ஆகியோர் மிகவும் சிறப்பாகப் பேசி அனைவரையும் கவர்ந்தனர்.

   மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

       , ‘மாதமொரு திருக்குறள்

என்ற தலைப்பில், நமது மன்றத்தின் புலவர் திரு.வி.மணிவாசகம் அவர்கள்,

திருக்குறள் அதிகாரம் 5-ல் 47- வது குறளாகிய,

“இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.”

பற்றி  மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்.

            நான்காவது  நிகழ்ச்சியாக,  

 “வாழ்க்கைக்குக்  கை கொடுப்பது உறவா ? அல்லது நட்பா ?”

என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.,

உறவு தான்  என்று , 1.திருமதி. பகவதி சுந்தரி,

2.திருமதி.அகிலா ,3.திரு.ஞானசேகரன் ,4.திரு.சிதம்பரம் ஆகியோர்

பேசினார்கள்.

நட்பு தான் என்று ,

1.திரு.கணேசன் ,

2.திருமதி.முத்துலட்சுமி,

3.திரு.பாலசுந்தரம்,

4.திரு.சிவராம சேது ,

5.திரு.நாராயணன் ,

6.திரு.தங்கராஜ் ,

7.திரு.வி.மகாலிங்கம் ,

8.திரு.டி .விஸ்வநாதன் , ஆகியோர் உறுப்பினர்கள் அனைவரும் ரசிக்கும்படியாகப் பேசி , கூட்டத்தைக் கல கலக்க வைத்தனர். நட்புடன் கூடிய உறவு

கடைசியில் பேசிய புலவர் திரு வி.மணிவாசகம் அவர்கள் நட்புடன் கூடிய உறவு தான் வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் என்று பேசி கருத்தரங்கத்தை நிறைவு செய்தார்.

      ஐந்தாவது நிகழ்ச்சியாக ,

திரு.டி.எஸ்.கணேசன் மற்றும் ,

திருமதி.ராஜலட்சுமி அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

            ஆறாவது நிகழ்ச்சியாக ,.

                  அதன்பின் மன்ற உறுப்பினர் ரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணிபரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு நமது சி.இ.ஓ அவர்களால் பரிசு வழங்கப்பட்டது.             

       இறுதியாக ,மன்ற நிறுவனர்  டாக்டர்.சி.வி.பிள்ளை அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

SBDC 55TH MEETING DT 17.09,20`17 – PHOTOS

 

SBDC 55TH MEETING DT 17.9.2017 / Google Photos

VIDEOS

SBDC 55TH MEETING DT 17.9.2017 PART II