SBDC 56TH MEETING DT 22.10.2017

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 56-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 22.10.2017 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி திருமதி.சித்ரா அவர்களாலும்  ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

22.10.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள

அரங்கத்தில் இந்த மன்றத்தின் 56வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக,”இது உங்கள் நினைவுக்காக ” நிகழ்ச்சியில் ,55வது கூட்டத்தில் (செப்டம்பர்‘ 17 ) நடைபெற்ற அனைத்து விபரங்களையும் திரு.ராஜாமணி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு , 10 நிமிட வீடியோவும் போட்டுக்காட்டப்பட்டது.

      இரண்டாவது நிகழ்ச்சியாக  ,

இது உங்கள் நேரம் நிகழ்ச்சியில் ,

திரு.சங்கரலிங்கம்,

திரு.ஞானதேசிகன்,

திரு,பிச்சை, மற்றும் திரு.நடராஜன் ஆகியோர் மிகவும் சிறப்பாகப் பேசி அனைவரையும் கவர்ந்தனர்.

    மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

       , ‘மாதமொரு திருக்குறள்

என்ற தலைப்பில், நமது மன்றத்தின் புலவர் திரு.வி.மணிவாசகம் அவர்கள்,

திருக்குறள் அதிகாரம் 43-ல் 429- வது குறளாகிய,

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய் “

பற்றி  மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்.

            நான்காவது  நிகழ்ச்சியாக,  சிறப்பு நிகழ்ச்சி கோவை சகோதரர்கள் ,

  1. பி.கிருஷ்ணமூர்த்தி & 2. பி.சுந்தரேசன் இருவரும் சேர்ந்து அதிரடியான கரோக்கி பாடல்களைச் சிறப்பாகப் பாடி அனைவரையும் ஆனந்தக் கடலில் ஆழ்த்திவிட்டார்கள்.

      ஐந்தாவது நிகழ்ச்சியாக ,

  1. திரு. சிவராமசேது,
  2. திருமதி.பி.சாரதாம்பாள்,
  3. திரு. நாராயணன்,
  4. திரு.பிச்சை,
  5. திருமதி.ஆர்.பிரேமா.

ஆகியோர்களின்  பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

           

ஆறாவது நிகழ்ச்சியாக ,.

                  அதன்பின் மன்ற உறுப்பினர் ரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணிபரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எஸ்.இராமலிங்கம் அவர்களால் பரிசு வழங்கப்பட்டது.     

கோவை சகோதரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.         

       இறுதியாக ,மன்ற நிறுவனர்  டாக்டர்.சி.வி.பிள்ளை அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

SBDC 56TH MEETING DT 22.10.2017 – PHOTOS

SBDC 56TH MEETING DT 22.10.2017 / Google Photos

SBDC 56TH MEETING DT 22.10.2017  VIDEO PART I