SBDC 57TH MEETING DT 26.11.2017.

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 57-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 26.11.2017 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி திருமதி.சித்ரா அவர்களாலும்  ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

26.11.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 57வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக,”இது உங்கள் நினைவுக்காக ” நிகழ்ச்சியில் ,56வது கூட்டத்தில் (அக்டோபர் ‘ 17 ) நடைபெற்ற அனைத்து விபரங்களையும் திரு.ராஜாமணி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு , 10 நிமிட வீடியோவும் போட்டுக்காட்டப்பட்டது.

      இரண்டாவது நிகழ்ச்சியாக  ,

இது உங்கள் நேரம் நிகழ்ச்சியில் ,

1)   திருமதி.முத்துலட்சுமி . திருமதி.ராஜம், மற்றும்

திரு. புருஷோத்தமன்  ஆகியோர் சேர்ந்து நடித்த ஒரு நிகழ்ச்சி .

மிகவும் சிறப்பாகச் செய்து அனைவரின் பாராட்டுதலைப் பெற்றனர்.

2)  திருமதி.சாந்தி அவர்களது அனுபவத்தைச்சொல்லி நமது நிறுவனர் அவர்களைப் பாராட்டியும் பேசி அனைவரின் கைதட்டலைப் பெற்றார்.

3)  திருமதி.வசந்தா சிதம்பரம் அன்பு எனும் தலைப்பில் பேசி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.

4)  திருமதி. கே.பகவதி சுந்தரி  “கடவுள் இருக்கிறார் ” என்பதனை

ஒரு அழகான கதையின் மூலம் நிரூபித்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.

    மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

       , ‘மாதமொரு திருக்குறள்

என்ற தலைப்பில், நமது மன்றத்தின் புலவர் திரு.வி.மணிவாசகம் அவர்கள்,

திருக்குறள் அதிகாரம் 132 -ல் 1317 – வது குறளாகிய,

“வழுத்தினாள் தும்மினே ளாக அழித்து அழுதாள்

யார் உள்ளித்தும்மினிர்  “

பற்றி  மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்.

            நான்காவது  நிகழ்ச்சியாக,  

  1. திரு. சேஷாத்ரி ,
  2. திருமதி.வசந்தா சிதம்பரம் ,
  3. திரு. வெங்கடராமன் ,

ஆகியோர்களின்  பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

   சிதம்பரம் தம்பதியினர் நிறுவனர் டாக்டர் .சி.வி.பிள்ளை அவர்களுக்கும் , நமது சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் , எஸ்.பி.டி.சி செவிலியர்களுக்கு GIFT  – கள்  கொடுத்தும் கௌரவித்தனர்.

      ஐந்தாவது  நிகழ்ச்சியாக ,வித்தியாசமான விளையாட்டு .

முதல் விளையாட்டு :

  1. மேஜை மேலிருக்கும் 10 பிளாஸ்டிக் கப்புகளை , தன்னால் ஊதிய

பலூனில் உள்ள காற்றினால் , ஊதிக் கீழே தள்ளவேண்டும்.

      A Team  and B Team  என இரு பிரிவுகளாகப் பிரித்து ,  அனைத்து உறுப்பினர்களும் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். A Team அதிகமான புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர். அந்த பிரிவுகளில் உள்ள அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

  1. இரண்டாவது விளையாட்டு :

      ஒரு TRAY – யில் பல சீட்டுக்கள் இருக்கும். ஒவ்வொரு சீட்டிலும்

சில வாசகங்கள் இருக்கும். அந்த சீட்டை எடுப்பவர்கள் அதிலிருக்கும் வாசகங்களை தப்பில்லாமல் படிக்க வேண்டும்.

பல உறுப்பினர்கள் கலந்துகொண்டு பரிசுகளைத்  தட்டிச்சென்றனர்.

ஆறாவது நிகழ்ச்சியாக

      திரு.ஆர்.புருஷோத்தமன் அவர்கள் ” பாட்டு பாடவா ” என்ற சினிமா பாடலை தனது வாயினால் விசிலடித்து எல்லாரையும் மகிழ்வித்தார்.

 ஏழாவது நிகழ்ச்சியாக               

கமிட்டி  உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணி பரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எஸ்.இராமலிங்கம் அவர்களால் பரிசு வழங்கப்பட்டது.     

       இறுதியாக ,மன்ற நிறுவனர்  டாக்டர்.சி.வி.பிள்ளை அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.