SBDC 58TH MEETING DT 24.12.2017

 

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 58-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 24.12.2017 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி திருமதி.சித்ரா அவர்களாலும்  ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

24.12.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 58வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

            முதலில் நமது மன்ற உறுப்பினர் திருமதி.சாரதாம்பாள்

 ( திரு.வி.மகாலிங்கம் அவர்களின் மனைவி ) மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

            முதல் நிகழ்ச்சியாக,”இது உங்கள் நினைவுக்காக ” நிகழ்ச்சியில் ,57வது கூட்டத்தில் (26.11.2017 ) நடைபெற்ற நிகழ்சிகளின் அனைத்து விபரங்களும், திரு.ராஜாமணி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு , அதன் சுருக்கமான 10 நிமிட வீடியோவும் போட்டுக்காட்டப்பட்டது.

      இரண்டாவது நிகழ்ச்சியாக  ,

இது உங்கள் நேரம் நிகழ்ச்சியில் ,

1)   திரு.அறிவுடைநம்பி.  

2)  திரு.ரங்கராஜன் ,

3)  திரு.என்.கணேசன் ,

4)  திரு.டி.எஸ். கணேசன் ,

5) திரு. பாலசுந்தரம்  ஆகியோர் பேசி அவர்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

        ‘திருக்குறள் போட்டி

நமது உறுப்பினர்கள் ,

1)  திரு.தங்கராஜ் ,

2) திரு.டி.விஸ்வநாதன்

3) திரு. பாலசுந்தரம் ,

4) திருமதி.வி.முத்துலட்சுமி,

5) திருமதி.வி.சாந்தி,

6) திருமதி.எம்.விசாலாட்சி ,

7) திரு. ஞானதேசிகன்,

8) திருமதி.இ.சாந்தி ,

9)  திரு.சுந்தரராஜன் ., ஆகியோர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தைக் கூறி, அதற்க்கு உண்டான திருக்குறளையும் சொல்லி , அனைவரையும் மகிழ்வித்தனர்.          

 

நான்காவது  நிகழ்ச்சியாக,  

  1. திரு. என்.கோபாலன் ,
  2. திரு.டி.விஸ்வநாதன் ,
  3. திருமதி.எஸ்.சித்ராதேவி ,
  4. திருமதி .எல்.சத்யவாணி ,

ஆகியோர்களின்  பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

   பிறந்த நாள் கொண்டாடிய விஸ்வநாதன்  தம்பதியினர் நிறுவனர் டாக்டர் .சி.வி.பிள்ளை அவர்களுக்கும் , நமது சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் , எஸ்.பி.டி.சி செவிலியர்களுக்கு GIFT  – கள்  கொடுத்தும் கௌரவித்தனர்.

      ஐந்தாவது  நிகழ்ச்சியாக ,           

கமிட்டி  உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணி பரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எஸ்.இராமலிங்கம் அவர்களால் பரிசு வழங்கப்பட்டது.     

      அதன்பின் , உறுப்பினர் திரு.ஆர்.விஸ்வநாதன் அவர்களின் பேத்திகள் ஸ்ருதி மற்றும் தன்வி இருவரும் சேர்ந்து மிகவும் சிறப்பான இன்னிசையினை வழங்கினர்.    

இறுதியாக ,மன்ற நிறுவனர்  டாக்டர்.சி.வி.பிள்ளை , அனைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

SBDC 58TH MEETING DT 24.12.2017 – PHOTOS

SBDC 58TH MEETING DT 24.12.2017. / Google Photos

SBDC 58TH MEETING DT 24.12.2017 -VIDEO PART I ( REVISED )

SBDC 58TH MEETING DT 24.12.2017 VIDEO PART II

SBDC 58TH MEETING DT 24.12.2017  VIDEO PART III

SBDC 58TH MEETING DT 24.12.2017 VIDEO PART IV