SBDC 59TH MEETING DT 28.1.2018

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 59-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு  (28.01.2018 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும்  ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

      மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது. மன்ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர் சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.

    28.01.2018 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 59வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.       

முதல் நிகழ்ச்சி       “இது உங்கள் நினைவுக்காக.

                  மன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு 58வது கூட்டத்தில் (24.12.2017 ) நடைபெற்ற நிகழ்ச்சிகளின் அனைத்து விபரங்களும், திரு.ராஜாமணி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு , அதன் சுருக்கமான 11 நிமிட வீடியோவும் போட்டுக்காட்டப்பட்டது.

      இரண்டாவது நிகழ்ச்சியாக  ,

இது உங்கள் நேரம் நிகழ்ச்சியில் ,

1)   திரு.வீரராகவன்

2) திரு. வெங்கடராமன்.

3) திரு.ஞானதேசிகன். 

4)  திரு.ரங்கராஜன் ,

ஆகியோர் அவர்களின் அனுபவங்களைப் பேசி உறுப்பினர்களை சந்தோஷப் படுத்தினர்.

மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

        மாதமொரு திருக்குறள்

நமது மன்ற உறுப்பினர். புலவர். வி. மணிவாசகம் அவர்கள் ,

” ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்

  தாழாது உஞற்றுபவர். ”

என்ற குறளைச் சொல்லி , நமது வாழ்கைக்கு உகந்த ஒரு சிறப்பான கதையினைக் கூறி அனைவரையும் சிந்திக்க வைத்தார்.

நான்காவது  நிகழ்ச்சியாக,  

     சிறப்புச் சொற்பொழிவாளர் சென்னை சமூகப்பணி கல்லூரி பேராசிரியர் முனைவர் புது யுகம் டி.வி.புகழ் மஞ்சுளா தியாகராஜன் அவர்கள் ” உறவுகள் ” என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் மிகவும் சிறப்பான சொற்பொழிவினை ஆற்றி , அனைவரையும் மகிழ்வித்தார்.

ஐந்தாவது நிகழ்ச்சியாக ,

     எங்களது மன்ற நிறுவனர் டாக்டர். சி.வி.பிள்ளை அவர்கள் , நமது மன்ற உறுப்பினர்களின் ஒவ்வொரு பிறந்தநாளையும் , உறுப்பினர்களுக்கு எந்தவித செலவும் இல்லாமல் ,அந்தந்த மாதக்கூட்டத்தில் கொண்டாடி இன்பம் காண்பவர்.

            அந்த வகையில் ,ஜனுவரி மாதப் பிறந்தநாள் கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு , இந்த ஜனுவரி மாதக்கூட்டத்தில் கொண்டாடப்பட்டது.

  1. திரு. பி.ரங்கராஜன் ,
  2. திரு. ஜே.சம்பத்குமார்,
  3. திரு.ஆர் .விஸ்வநாதன் ,
  4. திருமதி.ஜே.பிரேமா. ,

      5 திருமதி .ஜி. கோமதி .

ஆகியோர்களின்  பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

      ஆறாவது   நிகழ்ச்சியாக ,              

      கமிட்டி  உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணி பரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எஸ்.இராமலிங்கம் அவர்களால் பரிசு வழங்கப்பட்டது.     

      இறுதியாக ,மன்ற நிறுவனர்  டாக்டர்.சி.வி.பிள்ளை , அனைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.