60TH SBDC MEETING DT 25.02.2018

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 60-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு  (25.02.2018 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும்  ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

      மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது. மன்ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர் சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.

    25.02.2018 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.00மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 60வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.       

முதல் நிகழ்ச்சி       “இது உங்கள் நினைவுக்காக.

                  மன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு 59- வது கூட்டத்தில் (28.01.2018  ) நடைபெற்ற நிகழ்ச்சிகளின் அனைத்து விபரங்களும், திரு.ராஜாமணி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு , அதன் சுருக்கமான 10 நிமிட வீடியோவும் போட்டுக்காட்டப்பட்டது.

     

இரண்டாவது நிகழ்ச்சியாக  ,

இது உங்கள் நேரம் நிகழ்ச்சியில் ,

1)   திருமதி .ராஜேஸ்வரி.

2) திருமதி. பத்மஜா .

3) திருமதி . ராஜம் . 

ஆகியோர் அவர்களின் அனுபவங்களைப் பற்றிப் பேசியும் ,

  1. திருமதி.அன்னபூரணி அவர்கள் பாரதியாரைப் பற்றி ஒரு பாட்டு பாடியும் உறுப்பினர்களை சந்தோஷப் படுத்தினர்.

மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

      மன்றத்தின்  5-வது ஆண்டுவிழாவுக்குரிய விளையாட்டுக்கள்

OUTDOOR GAMES

  1. எஸ்.பி.டி.சி.செவிலியர்களுக்கான விளையாட்டு

     வாயில் ஸ்பூனை வைத்து அதன் மேல் சிறு பந்தை வைத்து ,

அந்த பந்தினை கொஞ்ச தூரத்திலுள்ள பாக்ஸ்-ல் போடவேண்டும் .

போட்டியில் இரண்டு, இரண்டு பேர்களாகக் கலந்து 8 பந்துகளில் அதிகமாகப் போட்டவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார்கள்.

  1. தம்பதியர்களுக்கான விளையாட்டு

      தம்பதியர் இருவரின் முதுகுக்கு நடுவில் ஒரு பெரிய பந்தை வைத்து கையினால் தொடாமல் கொஞ்ச தூரத்தில் இருக்கும் மேஜைவரை  நடந்து சென்று ,மேஜையினைத் தொடவேண்டும்.

  1. அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ள விளையாட்டு

     BAT AND BALL. A TEAM and B TEAM என 2 பிரிவாகப் பிரித்து

விளையாடி ஒவ்வொருவரும் 2 தடவை பேட் பண்ணி அதிகமான பாயிண்ட் எடுக்கும் பிரிவுக்கு பரிசு அளிக்கப்படும்.

INDOOR GAMES

  1. GENTS GAME :

          PICKING THE BALL WITH LEG.

  1. LADIES GAME :

            NEEDLE  AND  THREAD.

நான்காவது  நிகழ்ச்சியாக,  

          எங்களது மன்ற நிறுவனர் டாக்டர். சி.வி.பிள்ளை அவர்கள் , நமது மன்ற உறுப்பினர்களின் ஒவ்வொரு பிறந்தநாளையும் , உறுப்பினர்களுக்கு எந்தவித செலவும் இல்லாமல் ,அந்தந்த மாதக்கூட்டத்தில் கொண்டாடி இன்பம் காண்பவர்.

            அந்த வகையில் ,பெப்ரவரி’ 2018  மாதப் பிறந்தநாள் கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு , கொண்டாடப்பட்டது.

  1. திரு. சி.தங்கராஜ் ,
  2. திருமதி. எம்.விசாலாட்சி ,
  3. திருமதி .எஸ்.குணசுந்தரி ,
  4. திருமதி.பி.கமலாசினி .

      ஆகியோர்களின்  பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

ஐந்தாவது    நிகழ்ச்சியாக ,   

      கமிட்டி  உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணி பரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எஸ்.இராமலிங்கம் அவர்களால் பரிசு வழங்கப்பட்டது.     

      இறுதியாக ,மன்ற நிறுவனர்  டாக்டர்.சி.வி.பிள்ளை , அனைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

SBDC  60TH MEETING DT 25.02.2018 – PHOTOS.

SBDC 60TH MEETING DT 25.02.2018 / Google Photos

SBDC 60TH MEETING DT 25.02.2018 VIDEO PART I

VIDEO PART II