SBDC 63rd MEETING dt 20.5.2018.

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 63-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு  (20.05.2018 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும்  ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

      மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது. மன்ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர் சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.

    20.05.2018 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 63வது மாதாந்திரக் கூட்டம் பாலாறு பிரிவின் கேப்டன் திருமதி,சாந்தி மற்றும் திருமதி. ரேவதி இருவரும் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.       

முதல் நிகழ்ச்சி       “இது உங்கள் நினைவுக்காக.

                  மன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு 62வது கூட்டத்தில் (22.04.2018  ) நடைபெற்ற நிகழ்ச்சிகளின் அனைத்து விபரங்களையும் , அதன் சுருக்கமான 13 நிமிட வீடியோவில்  போட்டுக்காட்டப்பட்டது.

 

இரண்டாவது நிகழ்ச்சியாக ,

                      மாதமொரு திருக்குறள் என்ற தலைப்பில் , புலவர் .திரு.மணிவாசகம் அவர்கள் ஐந்து குறள்களை திரு.சங்கரலிங்கம் எழுதிய நூலிலுள்ள கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பேசி , அதற்க்கு உண்டான விளக்கத்தைச் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.

மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

     பாலாறு பிரிவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1) மே தினம் உருவாகியதைப் பற்றி திருமதி.செல்வம் அவர்கள் , சிறப்பாகப் பேசி அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.

2) திருமதி.கமலாசினி அவர்கள் ” மகள் ஒரு கவிதை ” என்ற கவிதையினைப் படைத்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.

3) திருமதி. பகவதி சுந்தரி அவர்கள் ” கதை அல்ல. நிஜம் ” என்ற தலைப்பில் திருப்பதி சம்பந்தமான விவரத்தைப் பற்றிப் பேசினார்.

4) பெண்ணின் பெருமை என்ற நாடகம் பாலாறு பிரிவினரால் ,

      திரு,எம்.ராஜாமணி  அவர்கள் நீதிபதியாகவும் ,

      திரு.டி.விஸ்வநாதன் அவர்கள் பிரதிவாதியின் வக்கீலாகவும்,

      திரு.நடராசன் அவர்கள் வாதியின் வக்கீலாகவும்,

      திரு.டி.எஸ்.கணேசன் அவர்கள் தந்தை ராகவனாகவும்,

      திரு. சிதம்பரம் அவர்கள் மகன் ராஜாவாகவும்,

      திருமதி.ரேவதி அவர்கள் மகள் கீதாவாகவும்,

      திருமதி.சாந்தி அவர்களது அயராத உழைப்பில் ,   நமது எஸ்.பி. டி .சி. மன்றத்தில்  பெண்ணின்  உரிமை  நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

நான்காவது நிகழ்ச்சியாக,  

     2018 மே மாத பிறந்தநாள் விழா கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

1 . திரு.ஏ.ஆர். பரமேஸ்வரன்        1943.              75.

  1. திரு. என்.கணேசன்                   1943.             75.
  2. திரு. வி.மகாலிங்கம்               1944.             74.
  3. திரு. எஸ்.பாலசுந்தரம்           1948.            70.
  4. திரு. எம்.தெய்வசிகாமணி   1949.             69.
  5. திரு. ஜி.சிதம்பரம்                      1949.             69.
  6. திருமதி .வி.சாந்தி                     1959.             59

 

              எல்லாவற்றிக்கும் மேலாக , நம் மன்ற நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களின் பிறந்தநாளை ,மிகவும் ஆரவாரத்துடனும், மிகுந்த சந்தோஷத்துடனும் ,பலத்த கரகோஷத்துடன் கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாள் கொண்டாடியவர்கள் எஸ்.பி.டி.சி. செவிலியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கினர்.

 

ஐந்தாவது நிகழ்ச்சியாக,

கமிட்டி  உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணி பரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எஸ்.இராமலிங்கம் அவர்களால் பரிசு வழங்கப்பட்டது.

      திரு.வி.மகாலிங்கம் அவர்கள் அவர்தம் மனைவியின் ஞாபகார்த்தமாக குலுக்கலில் சேலைகள் வழங்கினார்.          

      இறுதியாக ,மன்ற நிறுவனர்  டாக்டர்.சி.வி.பிள்ளை அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

SBDC 63rd MEETING DT 20.5.2018. – PHOTOS

 

SBDC 63rd MEETING dt 20.5.2018. / Google Photos

         

 SBDC 63rd MEETING dt 20.5.2018 VIDEO PART I

SBDC 63rd MEETING dt 20.5.2018. VIDEO PART II

 

 

 SBDC 63rd MEETING dt 20.5.2018 VIDEO PART III

 SBDC 63rd MEETING dt 20.5.2018 VIDEO PART IV