SBDC 64th MEETING DT 24.06.2018

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 64-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு  (24.06.2018 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும்  ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

      மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது. மன்ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர் சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.

    24.06.2018 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 64வது மாதாந்திரக் கூட்டம் காவேரி பிரிவின் மகளிர் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.      

முதல் நிகழ்ச்சி       “இது உங்கள் நினைவுக்காக.

                  மன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு 63வது கூட்டத்தில் (20.05.2018  ) நடைபெற்ற நிகழ்ச்சிகளின் அனைத்து விபரங்களையும் , அதன் சுருக்கமான 11 நிமிட வீடியோவில்  போட்டுக்காட்டப்பட்டது.

 

இரண்டாவது நிகழ்ச்சியாக ,

                      மாதமொரு திருக்குறள் என்ற தலைப்பில் , புலவர் .திரு.மணிவாசகம் அவர்கள் அழுக்காறாமை என்ற அதிகாரத்திலுள்ள, ” அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் ” என்ற குறளை எடுத்துச் சொல்லி அதற்க்கு உண்டான விளக்கத்தைச் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.

மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

     காவேரி  பிரிவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1) முதலில் காவேரி பற்றிய பாட்டுக்களின் ஆடியோ இரண்டு அல்லது மூன்று வரிகள் பாட , அதற்குத் தகுந்தபடி காவேரி உறுப்பினர்கள் டான்ஸ் ஆடி வலம் வந்தனர்.  

2) இரண்டாவதாக, காவேரி உறுப்பினர். திரு.சிவாஜி அவர்கள்

  BONSAI –பற்றி மிகச்சிறப்பாக எடுத்துக் கூறினார்.

3) மூன்றாவதாக, திரு. வி.மகாலிங்கம் அவர்களால் இயற்றப்பட்ட “நவீன திருவிளையாடல் ” நாடகம், திரு.ஞானதேசிகன் அவர்களுடன் சேர்ந்து  நடத்தப்பட்டது.

4) நான்காவதாக,

      “வெள்ளித்திரையில் வைர வரிகள் ” என்ற தலைப்பில் திரு. தங்கராஜ் அவர்கள் சிறப்பான பாடல்களைப் பாடி அனைவரையும் கவர்ந்தார். 

5)  ஐந்தாவதாக,

      திரு.வி.மகாலிங்கம் அவர்கள் “கண்ணன் ” பற்றிய பல வீடியோ பாட்டுக்களை டி.வி -யில் போட்டுக்காட்டி அனைவரையும் மகிழ்வித்தார்.

     

கடைசி  நிகழ்ச்சியாக,  

     2018 ஜூன் ‘ 2018 மாத பிறந்தநாள் விழா கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

1 . திரு.லக்ஷ்மிநாராயணன்.

  1. திரு. சங்கரலிங்கம் .
  2. திரு. ராஜாமணி .
  3. திரு. ஸ்ரீதரன்.  
  4. திரு. நடராஜன்.
  5. திரு. பரமச்சந்திரன்.
  6. திருமதி . சாந்தி ஆறுமுகம்.                             

    திரு.தெய்வசிகாமணி நடத்தும் குலுக்கல் சீட்டில்,  

பரிசு விழுந்த திரு.ஸ்ரீதரன் அவர்களுக்கு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் பரிசினை வழங்கினார்.

            இறுதியாக ,மன்ற நிறுவனர்  டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள், நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்ததை நினைவுபடுத்தி ,அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற,  கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

 SBDC 64TH MEETING PHOTOS

SBDC 64TH MEETING DT 24.06.2018 / Google Photos

         

SBDC 64TH MEETING DT 24.06.2018 . VIDEO PART I

SBDC 64TH MEETING DT 24.06.2018. VIDEO PART II

 

 SBDC 64TH MEETING DT 24.06.2018.VIDEO PART III