எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 65-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு (22.07.2018 ).
“அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது. மன்ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர் சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.
22.07.2018 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.25 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 65–வது மாதாந்திரக் கூட்டம் தாமிரபரணி பிரிவின் மகளிர் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சி “இது உங்கள் நினைவுக்காக. “
மன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு 64– வது கூட்டத்தில் (24.06.2018 ) நடைபெற்ற நிகழ்ச்சிகளின் அனைத்து விபரங்களையும் , அதன் சுருக்கமான 11 நிமிட வீடியோவில் போட்டுக்காட்டப்பட்டது.
இரண்டாவது நிகழ்ச்சியாக ,
மாதமொரு திருக்குறள் என்ற தலைப்பில் , புலவர் .திரு.மணிவாசகம் அவர்கள் ‘ஊக்கம் உடைமை’ என்ற அதிகாரத்திலுள்ள, ” உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் : மற்றுஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து ” என்ற குறளை எடுத்துச் சொல்லி அதற்க்கு உண்டான விளக்கத்தைச் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.
மூன்றாவது நிகழ்ச்சியாக,
தாமிரபரணி பிரிவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
1) Title Song – கினை திருமதி.சாந்தகுமாரியும் , திருமதி.சாந்தி ஆறுமுகம் இருவரும் நடனத்துடன் பாடினார்கள்.
2) தாமிரபரணி ஆற்றின் மகிமை மற்றும் அதனுடைய முக் கியத்துவத்தைப்பற்றியும் திருமதி.ராஜலக்ஷ்மி சூரியநாராயண ராவ்
அவர்கள் மிகச்சிறப்பாகப் பேசினார்கள்.
3) திருமதி.கோமதி கணேசன் அவர்கள் “குறையொன்றும் இல்லை கண்ணா ” என்ற நீண்ட பாடலைப் பாடி அனைவரின் கைதட்டலைப் பெற்றார்.
4) நான்காவதாக,
திருமதி.சாந்தகுமாரி மற்றும் அவர்களின் பேத்தி சுடிக் ஷா இருவருமாகச் சேர்ந்து ” முகுந்தா முகுந்தா ” எனும் பாடலுக்கு மிகச்சிறப்பாக நடனம் ஆடி , அனைவரையும் எழுந்து நின்று கை தட்ட வைத்துவிட்டார்கள்.
5) ஐந்தாவதாக ,
திரு.வெங்கட்ராமன் அவர்கள் நிகழ்த்திய நினைவுத் திறன் போட்டி. அதாவது, கூட்டத்திலுள்ள ஒரு நபரை தனியாக அழைத்து பதினைந்து வார்த்தைகள் ஒரே நிமிடத்தில் சொல்லிக்கொடுப்பார் .
அந்த பதினைந்து வார்த்தைகள் ஒரு போர்டில் எழுதப்பட்டு, கூட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்படி வைக்கப்பட்டிருக்கும் . ஒரே நிமிடத்தில் கற்றவர் , கூட்டத்தினரிடையே வந்து , அங்கிருக்கும் போர்டினைப் பார்க்காமல் , போர்டில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் அப்படியே தவறின்றி சொல்வது.
திரு.வெங்கட்ராமன் அவர்கள் ,உறுப்பினர்கள் கோபாலன் , விஸ்வநாதன் இருவரின் மூலம் அவர்களது நினைவுத்திறனை எடுத்துக்காட்டினார்.
6) ஆறாவதாக,
திரு.எஸ்.சங்கரலிங்கம் அவர்கள் , ” மனம் மகிழ ஒரு மன்றம் ” என்ற கவிதையினை அவரே இயற்றி , அவரே சினிமா மெட்டில் பாடி அனைவரையும் கவர்ந்தார்.
7) ஏழாவதாக ,
” நோயற்ற வாழ்விற்குப் பெரிதும் உதவுவது ,
மருத்துவமே ! மகிழ்ச்சியே ! ”
என்ற தலைப்பில் திரு.மணிவாசகம் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
மருத்துவம் தான் என்று,
- திரு.சேஷாத்ரி , 2. திருமதி.விசாலாட்சி, 3.திருமதி.சாந்தி ஆறுமுகம் மூவரும் பேசினர் .
மகிழ்ச்சி தான் என்று,
1.திருமதி.ராஜலக்ஷ்மி, 2.திரு.வெங்கட்ராமன், 3. பாலசுந்தரம் ஆகியோர் பேசினார்.
கடைசியில், நடுவர் நோயற்ற வாழ்விற்குப் பெரிதும் உதவுவது ,
மருத்தவமும் மகிழ்ச்சியும் இரண்டும் சேர்ந்தது தான் என்று தீர்ப்பு
வழங்கினார்.
நான்காவது நிகழ்ச்சியாக,
2018 ஜூலை ‘ 2018 மாத பிறந்தநாள் விழா கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1 . திரு.எம்.பாலையன் ( 91 )
- திரு. எம்.பரவச ராஜு ( 77 )
- திரு. ஆர்.வீர ராகவன் ( 77 )
- திரு. ஆர்.நடராசன் ( 73 )
- திருமதி . கே.பகவதி சுந்தரி ( 65 )
- திரு. கே.சுந்தரேசன் ( 66 )
- திருமதி . எஸ்.கன்னியம்மா ( 58 )
திரு.தெய்வசிகாமணி நடத்தும் குலுக்கல் சீட்டில்,
பரிசு விழுந்த திரு.சுந்தரேசன் அவர்களுக்கு திரு.தெய்வசிகாமணி அவர்கள் பரிசினை வழங்கினார்.
திரு.இராமலிங்கம் நடத்தும் குலுக்கல் சீட்டில்,
பரிசு திரு.இராமலிங்கம் அவர்களுக்கே விழுந்தபடியால், அந்தப் பரிசினை மகாலிங்கம் அவருக்கு வழங்கினார்.
இறுதியாக ,கமிட்டி உறுப்பினர் திரு.வி.மகாலிங்கம் அவர்கள், நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்ததை நினைவுபடுத்தி ,அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.