SBDC 66TH MEETING DT 26.08.2018

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 66-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு  (26.08.2018 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும்  ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

      மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது. மன்ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர் சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.

    26.08.2018 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 66வது மாதாந்திரக் கூட்டம் வைகை  பிரிவின் மகளிர் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.      

முதல் நிகழ்ச்சி       “இது உங்கள் நினைவுக்காக.

                  மன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு 65 வது கூட்டத்தில் (22.07.2018  ) நடைபெற்ற நிகழ்ச்சிகளின் அனைத்து விபரங்களையும் , மிகச்  சுருக்கமான 16 நிமிட வீடியோவில்  போட்டுக்காட்டப்பட்டது.

இரண்டாவது நிகழ்ச்சியாக ,

                      மாதமொரு திருக்குறள் என்ற தலைப்பில் , புலவர் .திரு.மணிவாசகம் அவர்கள் தெரிந்து தெளிதல் என்ற அதிகாரத்திலுள்ள, ” பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தம்தம் : கருமமே கட்டளைக்கல் ”  என்ற 505 -வது குறளை எடுத்துச் சொல்லி அதற்க்கு உண்டான விளக்கத்தைச் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.

மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

     வைகைப்   பிரிவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வைகைப்   பிரிவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கியவர் திருமதி.வி. முத்துலட்சுமி அவர்கள்.

1) குட்டி.மதுரா பாரதியார் பாடல் ஓன்று பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

2) திரு.அறிவுடை நம்பி பாரதியார் வேடமிட்டு , பாரதியார் பாட்டுக்களைப் பாடி வந்து, காந்தி, ராஜாஜி, நேரு, காமராஜர், திருப்பூர் குமரன் அவர்களைச் சந்தித்ததாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

3) வைகையைப் பற்றி திரு .இராமலிங்கம் அவர்கள் எடுத்துக் கூறினார்.

4) நான்காவதாக,

 திருமதி.சுலோச்சனா  அவர்களின் சிறப்பான நடனம் நடைபெற்றது.  மிகவும் சிறப்பாக இருந்தது.

 5) ஐந்தாவதாக ,

      திருமதி.வி.முத்துலட்சுமி அவர்கள் தனது நகைச்சுவைகளால் அனைவரையும் சிரிக்க வைத்தார்.

6) ஆறாவதாக,   

தேசிய ஒற்றுமை, மற்றும் மாத நல்லிணக்கத்தைப் பற்றிய ஒரு நாடகம் நடைபெற்றது.

7)  ஏழாவதாக ,

வைகைப் பிரிவின் , திரு.அறிவுடை நம்பி அவர்கள் திரைப் பாடல்களைப் பாடினார்.

வகைப்பிரிவின் திருமதி. முத்துலட்சுமி மற்றும் திருமதி.சுலோச்சனா இருவரும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினர்.

            நான்காவது நிகழ்ச்சியாக,  

     2018 ஆகஸ்ட்  ‘ 2018 மாத பிறந்தநாள் விழா கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

1 . திரு. ஆர். சூரிய நாராயண ராவ்.                                

  1. திரு. வி.செல்வராஜ்.

 திரு.தெய்வசிகாமணி நடத்தும் குலுக்கல் சீட்டில், 

பரிசு விழுந்த திருமதி .வசந்தா  சிதம்பரம்   அவர்களுக்கு வழங்கப்பட்டது.

திரு.இராமலிங்கம்  நடத்தும் குலுக்கல் சீட்டில், 

பரிசு திருமதி..ராஜலக்ஷ்மி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

      இந்தக்கூட்டத்தில் விருந்தினர்களாக வந்த ஆறு பேரை நமது நிறுவனர். டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

      அதன்பின், மூத்தோர்களின் மறதியினைப் போக்க , விஞ்ஞான ரீதியாக முடிவு செய்த பயிற்சியினை, டாக்டர் சி.வி.பிள்ளை அனைவருக்கும் சொல்லிக்கொடுக்க , மேடையில் உறுப்பினர்கள் அந்தப்  பயிற்சியினைச் செய்தார்கள்.

இறுதியில், நிறுவனர். டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள், நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்ததை நினைவுபடுத்தி ,  அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற,  கூட்டம் இனிதே முடிவடைந்தது.