SBDC 67TH MEETING DT 23.09.2018

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 67-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு  (23.09.2018 ).

            “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும்  ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

      மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது. மன்ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர் சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.

    23.09.2018 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 67வது மாதாந்திரக் கூட்டம் ஸ்ரீ  பாலாஜி நீரழிவு மையத்தின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.           

முதல் நிகழ்ச்சி       “இது உங்கள் நினைவுக்காக.

                  மன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு 66வது கூட்டத்தில் (26.08.2018  ) நடைபெற்ற நிகழ்ச்சிகளின் அனைத்து விபரங்களையும் , அதன் சுருக்கமான 11 நிமிட வீடியோவில்  போட்டுக்காட்டப்பட்டது.

 

இரண்டாவது நிகழ்ச்சியாக ,

                      மாதமொரு திருக்குறள் என்ற தலைப்பில் , புலவர் .திரு.மணிவாசகம் அவர்கள் தவம்  என்ற அதிகாரத்திலுள்ள, “தன் உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்” என்ற குறளை எடுத்துச் சொல்லி அதற்க்கு உண்டான விளக்கத்தைச் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.

        நமது நிறுவனர் டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள், பாலாறு,காவேரி, தாமிரபரணி, மற்றும் வைகை பிரிவுகள் நிகழ்த்திய நிகழ்ச்சிகளுக்கு உரிய மதிப்பெண்களைத் தெரிவித்தார்கள்.

மூன்றாவது  நிகழ்ச்சியாக,  

     நமது மன்றத்திற்கு வருகை தந்திருந்த விருந்தினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

நான்காவது நிகழ்ச்சியாக,  

     செப்டம்பர் ‘2018  மாத விளையாட்டாக Passing the Ball with Wooden  Piece  பாலாறு,காவேரி, தாமிரபரணி, மற்றும் வைகை பிரிவுகள் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினர்.

ஐந்தாவது  நிகழ்ச்சியாக,  

     2018 செப்டம்பர்  ‘ 2018 மாத பிறந்தநாள் விழா கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

1 . திரு.டி.எஸ்.கணேசன்.

  1. திருமதி. எஸ்.ராஜலக்ஷ்மி .

                    

      திரு.தெய்வசிகாமணி நடத்தும் குலுக்கல் சீட்டில், 

பரிசு விழுந்த திரு.பாலசுப்ரமணி  அவர்களுக்கு திரு.தெய்வசிகாமணி  பரிசினை வழங்கினார்.

      திரு.இராமலிங்கம்  நடத்தும் குலுக்கல் சீட்டில், 

பரிசு விழுந்த நபருக்கு  திரு. இராமலிங்கம்  பரிசினை வழங்கினார்.

      ஆறாவது நிகழ்ச்சியாக ,

                  மூத்தோர்களுக்கான விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட நடன  பயிற்ச்சிகளை டாக்டர் எடுத்துச்சொல்ல , திரு. தெய்வசிகாமணி நடனமாடிக் காண்பிக்க , அனைத்து உறுப்பினர்களும் மேற்கண்ட பயிற்ச்சியினை அழகான நடனத்துடன் வெளிப்படுத்தினார்கள்.

 

            இறுதியாக ,மன்ற நிறுவனர்  டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள், நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்ததை நினைவுபடுத்தி ,அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற,  கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

 

         SBDC 67TH MEETING DT 23.09.2018 VIDEOS.

 

 

 

 

 

 

எங்களது மன்ற நிறுவனர் டாக்டர். சி.வி.பிள்ளை அவர்கள் , நமது மன்ற உறுப்பினர்களின் ஒவ்வொரு பிறந்தநாளையும் , உறுப்பினர்களுக்கு எந்தவித செலவும் இல்லாமல் ,அந்தந்த மாதக்கூட்டத்தில் கொண்டாடி இன்பம் காண்பவர்.

            அந்த வகையில் ,பெப்ரவரி 2018  மாதப் பிறந்தநாள் கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு , கொண்டாடப்பட்டது.

  1. திரு. சி.தங்கராஜ் ,
  2. திருமதி. எம்.விசாலாட்சி ,
  3. திருமதி .எஸ்.குணசுந்தரி ,
  4. திருமதி.பி.கமலாசினி .

      ஆகியோர்களின்  பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

ஐந்தாவது    நிகழ்ச்சியாக ,  

      கமிட்டி  உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எம்.தெய்வசிகாமணி பரிசுகள் வழங்கினார்.

  பிறகு, மன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராமலிங்கம் நடத்தும் லக்கி குலுக்கலில் சீட்டு விழுந்த நபருக்கு திரு.எஸ்.இராமலிங்கம் அவர்களால் பரிசு வழங்கப்பட்டது.     

      இறுதியாக ,மன்ற நிறுவனர்  டாக்டர்.சி.வி.பிள்ளை , அனைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.