SBDC 72nd MEETING DT 24.2.2019.

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 72 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 24.02.2019 )
SBDC- SRI BALAJI DIABETIC CENTRE. அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர்.
இந்த ளுசi டீயடயதi னுயைடிநவiஉ ஊநவெசந க்கு வரும் நபர்களுக்கு உடலளவிலுள்ள நோயினை நமது டாக்டர்.சி.வி.பிள்ளை தீர்த்து வந்தார்.
பெரும்பாலோனார் அதிலும் மூத்த குடிமக்கள் மனதளவில் மிகவும் கஷ்டப்படுவதை உணர்ந்து- அவர்களை எப்படி குஷிப்படுத்தலாம் என தனது துணைவியாரிடம் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான்-
31.3.2013-ல் ஆரம்பித்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்;ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார். இது வரை மாதாமாதம் நடத்தி வரும் 71 கூட்டங்கள் முடிவடைந்தன
( 5 – ஆம் ஆண்டு விழா உட்பட ) .
இந்த மன்றத்தின் 72-வது கூட்டம் 24.02.2019 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில்; எஸ்.பி.டி.சி -யின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சி
காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் தீவிரவாதிகளால் வீரமரணம் அடைந்த நமது 40 வீரர்களுக்கு
மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களுக்காக ஒரு தொகையினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இரண்டாவது நிகழ்ச்சி
‘ இது உங்கள் நினைவுக்காக “
இந்த நிகழ்ச்சி இதற்கு முந்தைய கூட்டத்தின் நிகழ்ச்சிகளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதற்க்காக ஏற்படுத்தப்பட்டது.
இந்த 72-வது கூட்டத்தில் 71-வது (27.01.2019) கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் சுருக்கமான வீடியோவினை திரு.ராஜாமணி அவர்களால் போட்டுக் காட்டப்ப்டது.
3 – வது நிகழ்ச்சி
சினிமா துளிகள் – திரு.வி.மகாலிங்கம் அவர்கள் வீடியோ ஒன்று போட்டு சினிமா பற்றிய விபரங்களையும் நமது மூவர்ணக்கொடியின் வரலாற்றைப் பற்றியும் கூறி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.
4 – வது நிகழ்ச்சி
மாதமொரு திருக்குறள் என்ற தலைப்பில் புலவர்.திரு.மணிவாசகம் அவர்கள் 505 – வது குறள் – பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக்கல் – ஐ எடுத்துச்சொல்லி அதற்கு உண்டான விளக்கத்தை மிகவும் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.
5-வது நிகழ்ச்சி
6-வது ஆண்டுவிழாவிற்க்கான விளையாட்டுக்கள் :

 1. எஸ்.பி;.டி.சி செவிலியர்களுக்கான விளையாட்டு.
  மேஜை மீது 3 இடத்தில் 15 பிளாஸ்டிக் கப்புகள் ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப் பட்டிருக்கும். அடியில் உள்ள கப்பில் சிவப்பு கலர் அடையாளம் இருக்கும். சிவப்பு கலர் அடையாளம் கீழே வரும் வரை ஒன்றொன்றாக எடுத்து அடியில் அடுக்க வேண்டும்.
  யாருக்கு முதலில் சிவப்பு கலர் அடையாளம் உள்ள கப் அடியில்
  வருகிறதோ அவர்கள் வெற்றி அடைந்தவர் ஆவர்.
  9 பேர் பங்கு கொண்டு 5 பேர் வெற்றி பெற்றார்கள்.
 2. தம்பதியர் விளையாட்டு :
  கணவர் மனைவி 15 அடி தூரத்தில் இருப்பர். ஒருவர் அங்கு வைத்திருக்கும் பக்கெட்டின் அருகில்; இருப்பார். இன்னொருவர் கையில் பெரிய பலூன் வைத்திருப்பார். வுpளையாட்டு ஆரம்பிக்குமுன் பலூன் வைத்திருப்பவரின் கண்ணைக் கட்டிவிடுவர். ஆரம்பித்தவுடன் பலூன் வைத்திருப்பவர் பக்கெட் பக்கத்தில் இருப்பவர் சொல்லுகிறபடி பலூனுடன் நடந்து சென்று அந்த பக்கெட்டில் பலூனைப் போட வேண்டும்.
  இதில் பல கணவர் மனைவிகள் பங்கு பெற்றிருந்தாலும்
  ராமலிங்கம் -விசாலாட்சி தம்பதியர்.
  ஏழமலை – மல்லீஸ்வரி தம்பதியர்.
  சூரியநாராயண ராவ் – ராஜலட்சுமி தம்பதியர்கள் வென்றனர்.
 3. தனிப்பட்டவர் விளையாட்டு :

மேஜை மீது 6 இடத்தில் 30 பிளாஸ்டிக் கப்புகள் ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப் பட்டிருக்கும். அடியில் உள்ள கப்பில் சிவப்பு கலர் அடையாளம் இருக்கும். சிவப்பு கலர் அடையாளம் கீழே வரும் வரை ஒன்றொன்றாக எடுத்து அடியில் அடுக்க வேண்டும்.
யாருக்கு முதலில் சிவப்பு கலர் அடையாளம் உள்ள கப் அடியில்
வருகிறதோ அவர்கள் வெற்றி அடைந்தவர் ஆவர்.
அனைத்து உறுப்பினர்களையும் 3 பிரிவாகப் பிரித்து அதாவது 50வயதுக்கு மேல் – 60 வயதுக்கு மேல் -70 வயதுக்கு மேல் என்று பிரித்து விளையாடியதில்; கீழ்கண்ட 3 பேர் வெற்றி பெற்றார்கள்.

 1. திரு. கே.வெங்கடராமன்.
 2. திரு. ஏ.ஆர்.பரமேஸ்வரன்.
 3. திருமதி. ஏஸ்.விஜயகுமாரி.
  6-வது நிகழ்ச்சி – பிறந்த நாள் கொண்டாட்டம்
  கீழ்கண்ட உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
 4. திரு. சுp.தங்கராஜ்.
 5. திரு. கே.சிவாஜி.
 6. திருமதி. எம். விசாலாட்சி.
 7. திருமதி. எஸ்.குணசுந்தரி.
 8. திரு. இ.ஜெயபதி.
  7-வது நிகழ்ச்சி
  திரு. தெய்வசிகாமணி மற்றும் திரு. ராமலிங்கம் அவர்களின் குலுக்கல் சீட்டில் முறையே சி.வி.நடராஜன் வி.சுப்பையா இருவருக்கும் பரிசு கிடைத்தது.
  8-வது நிகழ்ச்சி
  கடைசியாக நமது நிறுவனர் அனைவருக்கும் நன்றி சொல்ல கூட்டம் இனிதே முடிவடைந்தது.

SBDC 72nd MEETING DT 24.2.2019. / Google Photos

VIDEOS

SBDC 72nd MEETING DT 24.2.2019 . VIDEO PART I