SBDC 75TH MEETING DT 26.05.2019

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 75 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 26.05.2019 )
SBDC SENIORS RECREATION CLUB . அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர்.
இந்த Sri Balaji Diabetic Centre- க்கு வரும் நபர்களுக்கு உடலளவிலுள்ள நோயினை நமது டாக்டர்.சி.வி.பிள்ளை தீர்த்து வந்தார்.
பெரும்பாலோனார் அதிலும் மூத்த குடிமக்கள் மனதளவில் மிகவும் கஷ்டப்படுவதை உணர்ந்து- அவர்களை எப்படி குஷிப்படுத்தலாம் என தனது துணைவியாரிடம் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான்-
31.3.2013-ல் ஆரம்பித்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.
இந்த மன்றத்தின் 75-வது கூட்டம் 26.05.2019 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில்; எஸ்.பி.டி.சி -யின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சி
திருமதி. கே.பகவதிசுந்தரி அவர்கள் இன்றைய காலக்கட்டத்தில் உயர் கல்வி கற்க என்னென்ன
வழிமுறைகள் உள்ளன என்பதைப் பற்றி மிகவும் தெளிவாகப் பேசி மன்ற உறுப்பினர்களின்
சந்தேகங்களை தெளிவுபடுத்தினார்.

2-வது நிகழ்ச்சி
மன்ற நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் இந்த 75-வது கூட்டத்தில் புதியதொரு நிகழ்ச்சியினை அறிமுகம் செய்து வைத்தார். மருத்துவச் சிரிப்பு என்ற நிகழ்ச்சியினை ஆரம்பித்து அவர் சிரிக்க மற்ற அனைவரையும் சுமார் 5 நிமிடம் வரை சிரிக்க வைத்துவிட்டார். லாபர் தெராப்பி ( Laughter Therapy ) இந்த மன்றத்தில் 75-வது கூட்டத்தில் மருத்துவ சிரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.


3 -வது நிகழ்ச்சி
நமது மன்ற உறுப்பினர் இ.சாந்தி அவர்களின் பெயர்த்திகளான இரு மழலைச்செல்வங்கள்

 1. காவியச்செம்மொழி 2. கமலினி – இருவரும் சேர்ந்து மிக மிகச் சிறந்த பரத நாட்டியம்
  ஆடி அனைவரின் கைதட்டலைப் பெற்றனர். அவர்களுக்கு மன்றத்தின் சி.இ.ஓ அவர்களால் பரிசு கொடுக்கப்பட்டது.

4-வது நிகழ்ச்சி
இதே 75-வது கூட்டத்தில் எஸ்.பி.டி.சி-யின் இன்னொரு புதிய நிகழ்ச்சியினையும் மன்ற நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அதாவது- இந்த மன்ற உறுப்பினர்களின் நேரடி பிள்ளைகளோ அல்லது பேத்திகளோ 10-வது மற்றும் 12-வது வகுப்பில் முதன்மை மார்க் வாங்கியவர்களுக்கு எஸ்.பி.டி.சி-யின் சான்றிதழும் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அவர்களால் ரூபாய் ஆயிரம் தொகை கொடுப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி –
1) உறுப்பினர் திரு.என்.கணேசன் அவர்களின் பெயர்த்தி. செல்வி. வி. அபர்ணா -வித்யா மந்திர் உயர்நிலைப்பள்ளி- மைலாப்பூரில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 12 வது வகுப்பில்
தேர்ச்சி பெற்று 500 மார்க்குக்கு 479 மார்க் பெற்றமைக்கு எஸ்.பி.டி.சி-யின் சான்றிதழும்
ரூபாய் ஆயிரம் தொகையும் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அவர்களால் வழங்கப்பட்டது.

2) உறுப்பினர் திரு.எம். தெய்வசிகாமணி; அவர்களின் பெயரன்.செல்வன். எஸ்.சித்தாந்த் அரவிந்த் லிகோல் இன்டர்நேஷனல்; உயர்நிலைப்பள்ளி- புதுச்சேரியில்; சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 10 வது வகுப்பில் தேர்ச்சி பெற்று 500 மார்க்குக்கு 449 மார்க் பெற்றமைக்கு எஸ்.பி.டி.சி-யின் சான்றிதழும்
ரூபாய் ஆயிரம் தொகையும் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அவர்களால் வழங்கப்பட்டது.

3) உறுப்பினர் திரு. சூரியநாராயணராவ் அவர்களின் பெயரன் . செல்வன். அனிருத் டி.ஏ.வி பப்ளிக் பள்ளி- வேளச்சேரி; சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 10 வது வகுப்பில்
தேர்ச்சி பெற்று 500 மார்க்குக்கு 478 மார்க் பெற்றமைக்கு எஸ்.பி.டி.சி-யின் சான்றிதழும்
ரூபாய் ஆயிரம் தொகையும் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அவர்களால் வழங்கப்பட்டது.

5-வது நிகழ்ச்சி
இசைப்பாடல்கள் :;

 1. திருமதி. லட்சுமி நடராஜன்.
 2. திரு. எம்.சங்கரலிங்கம் மற்றும் திரு.வி.மகாலிங்கம்.
 3. திருமதி.கோமதி கணேசன்.
 4. செல்வி.மேகந்தா –சரோஜா அவர்களின் பெயர்த்தி.
 5. செல்வன்.புp.எஸ்.சித்தாந்த் அரவிந்த்-தெய்வசிகாமணியின் பெயரன்.
 6. திரு. சி.வி.நடராஜன்.
 7. திருமதிகள். சாந்தி- பத்மஜா- சுலோசனா- லட்சுமி.
  6-வது நிகழ்ச்சி
  2019 மே மாத பிறந்தநாள் கொண்டாட்டம்.
  கீழ்கண்டவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
 8. திரு. ஏ.ஆர்.பரமேஸ்வரன். 01.-5.1943.
 9. திரு. என்.கணேசன். 21.05.1943.
 10. திரு. வி.மகாலிங்கம். 03.05.1944.
 11. திரு. டி.ஆறுமுகம். 20.05.1947.
 12. திரு. எஸ்.பாலசுந்தரம் 21.05.1948.
 13. திரு.எம்.தெய்வசிகாமணி. 23.05.1949.
 14. திருமதி. வி. சாந்தி. 17.05.1959.
 15. மன்ற நிறுவனர். டாக்டர். சி.வி.பிள்ளை.
  7-வது நிகழ்ச்சி
  திரு. தெய்வசிகாமணி மற்றும் திரு. ராமலிங்கம் அவர்களின் குலுக்கல் சீட்டில் கிடைத்தவர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்தனர்.
  8-வது நிகழ்ச்சி
  உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவ நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
  9-வது நிகழ்ச்சி
  கடைசியாக டாக்டர். சி.வி.பிள்ளை அவர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னவுடன்
  பிறந்தநாள் கொண்டாடிய உறுப்பினர்கள் அனைவராலும் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு உணவினை அனைத்து உறுப்பினர்களுக்கும் பரிமாறப்பட்டது.