SBDC 76TH MEETING DT 30.06.2019

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 76 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 30.06.2019 )
SRI BALAJI DIABETIC CENTRE அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர்.
இந்த

SRI BALAJI DIABETIC CENTRE க்கு வரும் நபர்களுக்கு உடலளவிலுள்ள நோயினை நமது டாக்டர்.சி.வி.பிள்ளை தீர்த்து வந்தார்.
பெரும்பாலோனார் அதிலும் மூத்த குடிமக்கள் மனதளவில் மிகவும் கஷ்டப்படுவதை உணர்ந்து- அவர்களை எப்படி குஷிப்படுத்தலாம் என தனது துணைவியாரிடம் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான்-
31.3.2013-ல் ஆரம்பித்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்;ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.
இந்த மன்றத்தின் 76-வது கூட்டம் 30.06.2019 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில்; எஸ்.பி.டி.சி -யின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சி
மன்ற உறுப்பினர்களை சாமந்திப்பிரிவு – ரோஜாப்பிரிவு என்று பிரித்ததில் இந்த மாத ஜூன் 2019 நிகழ்ச்சிகளை சாமந்திப்பிரிவு திருமதி.சாந்தி விஸ்வநாதன் தலைமையில் கீழ்கண்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

  1. ஜனனி ஜனனி எனும் பாட்டு.
    ஆதிசங்கரர் ( திரு.கணேசன் ) தியானத்தில் இருக்கும்பொழுது திருமதி.சுலோசனா அவர்களும் திருமதி.பத்மஜா அவர்களும் சேர்ந்து சிறப்பான நடனத்துடன் ஜனனி ஜனனி என்ற பாடலைப்; பாடி அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தனர்.
  2. தெருக்கூத்து நடனம்.
    நவராத்திரி திரைப்படத்திலுள்ள ராஜாதி ராஜ மக என்ற தெருக்கூத்து பாடலை
    திருமதி.சாந்தி விஸ்வநாதன் அவர்களும் திருமதி.சாந்தி ஆறுமுகம் அவர்களும் இணைந்து மிகவும் சிறப்பாகவும்-விறுவிறுப்பாகவும் நடித்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்கள்.
  3. கரோக்கி பாடல்கள்.
    அ) திரு.தங்கராஜ் (வயது 82)- தனது வயதையும் மீறி உலகம் பிறந்தது எனக்காக என்ற எம்.ஜி.ஆர் பாடும் பாடலை மிகச்சிறப்பாக பாடியதும் இல்லாமல் ஆடவும் செய்து அனைவரையும் வியக்க வைத்தார்.
    ஆ) திரு.டி.எஸ்.கணேசன் அவர்கள் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் பாடலைச் சிறப்பாகப் பாடி அனைவரையும் மகிழச் செய்தார்.
    இ) திருமதி.லட்சுமி நடராஜன் அவர்கள் ஊரு சனம் என்ற பாடலை மிகவும் சிறப்பாகப் பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
    ஈ) திரு.சி.வி.நடராஜன் அவர்கள் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் என்ற பாடலை மிகவும் சிறப்பாகப் பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
    உ) திருமதி.கோமதி கணேசன் அவர்கள் பக்திப் பாடலைப் பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
  4. இவர்களும் மனிதர்களா ? என்ற நாடகம்.
    இந்த நாடகத்தை இயற்றியவரும் இயக்குநரும் திருமதி.பத்மஜா அவர்கள்.
    திரு.ஆர்.நடராஜன் – திருமதி.பத்மஜா- திரு.தங்கராஜ் – திருமதி.சுலோசனா – திருமதி. சாந்தி விஸ்வநாதன் – திரு.வி.மணிவாசகம் – திருமதி.இ.சாந்தி ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்துஅனைவரையும் மகிழச்செய்தனர். மிக மிகச் சிறப்பாகச் செய்தனர்.
  5. சாமந்திப் பிரிவினர் நிகழ்த்திய குழு நடனம்
    பாகப்பிரிவினைத் திரைப்படத்தில் வரும் தேரோடும் என்ற பாட்டிற்கு திருமதி.சாந்தி விஸ்வநாதன் – சுNலூசனா – திருமதி.இ.சாந்தி – திருமதி. பத்மஜா – திரு.ஆர.நடராஜன் – திரு.மணிவாசகம் – திரு.தங்கராஜ் – திரு.ஆர.விஸ்வநாதன். அனைவரும் சேர்ந்து ஒரு குழு நடனம் ஆடி அனைவரையும் மகிழச்செய்தனர்.
  6. திரு.ஆர்.நடராஜன் அவர்களும் திருமதி. லட்சுமி நடராஜன் அவர்களும் சேர்ந்து நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் எனும் பாடலுக்கு காதல் பரவசத்துடன் இரட்டையர் நடனம் ஆடி அசத்திவிட்டனர். 3 -வது நிகழ்ச்சி
    2019 ஜூன் மாத பிறந்தநாள் கொண்டாட்டம்.
    கீழ்கண்டவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
  7. 1) திரு. எஸ்.சங்கரலிங்கம். 07.-06.1943.
  8. 2) திரு. எஸ்;.ராமலிங்கம். 08.06.1943.
  9. 3) திரு. எம்.ராஜாமணி. 23.06.1946.
  10. 4) திரு. நடராஜன். 29.06.1952
  11. 5) திருமதி. சாந்தி ஆறுமுகம். 13.06.1956.
    4-வது நிகழ்ச்சி
    திரு. தெய்வசிகாமணி மற்றும் திரு. ராமலிங்கம் அவர்களின் குலுக்கல் சீட்டில் கிடைத்தவர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்தனர்.
    5-வது நிகழ்ச்சி
    உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவ நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
    6-வது நிகழ்ச்சி
    கடைசியாக டாக்டர். சி.வி.பிள்ளை அவர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னவுடன்
    கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
    .

ey=U1dBbDYwY2xEdXZ3emdJSWo4NWd4SEVlNld6