SBDC 77TH MEETING DT 28.7.2019

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 77 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 28.07.2019 )


SBDC-SRI BALAJI DIABETIC CENTRE. அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர்.


இந்த SRI BALAJI DIABETIC CENTRE- க்கு வரும் நபர்களுக்கு உடலளவிலுள்ள நோயினை நமது டாக்டர்.சி.வி.பிள்ளை தீர்த்து வந்தார்.


பெரும்பாலோனார் அதிலும் மூத்த குடிமக்கள் மனதளவில் மிகவும் கஷ்டப்படுவதை உணர்ந்து- அவர்களை எப்படி குஷிப்படுத்தலாம் என தனது துணைவியாரிடம் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான்-
31.3.2013-ல் ஆரம்பித்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.


இந்த மன்றத்தின் 77-வது கூட்டம் 28.07.2019 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில்; எஸ்.பி.டி.சி -யின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.


முதல் நிகழ்ச்சி
மன்ற உறுப்பினர்களை சாமந்திப்பிரிவு – ரோஜாப்பிரிவு என்று பிரித்ததில் இந்த மாத ஜூலை 2019 நிகழ்ச்சிகளை ரோஜா பிரிவு திரு. டி. விஸ்வநாதன் தலைமையில் கீழ்கண்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

  1. இணையர் நடனம்
    திரு.எம்.தெய்வசிகாமணியும் திருமதி.ரேவதி அவர்களும் ரோஜா மலரே என்ற
    பாட்டுக்கு நடனம் ஆடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தனர்.
  2. எ.ஸ்.பி.டி.சி மன்றத்தை புகழ்ந்து பாடிய பாட்டு
    திரு.சங்கரலிங்கம் – திரு. பரமேஸ்வரன் – திரு.சந்திரசேகரன் -திரு.ராமையா
    ஆகிய நால்வரும் நமது மன்றத்தின் செயல்பாட்டை புகழ்ந்து மன்னவன் கேட்டான் என்ற சினிமாப் பாடலின் மெட்டில் பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றனர்.
  3. நடனமும் நாட்டியமும்
    தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப்படத்தில் வரும் நலந்தானா என்ற பாட்டுக்கு திரு.தெய்வசிகாமணி நாதஸ்வரம் வாசி;க்க-திருமதி.சாந்தகுமாரி சிறப்பாக நடனம் ஆடி அனைவரையும் மகிழச் செய்தனர்.
  4. ஆண் தனிப் பாட்டு
    திரு.ஸ்ரீதரன் புதியவானம் என்ற திரைப்படத்தின் பாடலுக்கு எம்.ஜி.ஆர். போன்று நடனம் ஆடி அனைவரையும் வியக்கச் செய்தார்.
  5. பட்டிமன்றம்.
    தலைப்பு : அதிகமான மகிழ்ச்சி கிடைப்பது வீட்டிலா ? அல்லது
    வெளியிலா ?
    நடுவர் : திருமதி. முத்துலட்சுமி.
    அதிகமான மகிழ்ச்சி கிடைப்பது வீட்டில் தான் என்று வாதிட்டவர்கள் திருமதி.செல்வம்.திருமதி.விசாலாட்சி.
    அதிகமான மகிழ்ச்சி கிடைப்பது வெளியில் தான் என்று வாதிட்டவர்கள்
    1.திருமதி.பகவதி சுந்தரி.
    2.திருமதி.மல்லீஸ்வரி.
    அனைவரும் மிகச்சிறப்பாகப் பேசினார்கள்.
    கடைசியில் நடுவர் அதிகமாக மகிழ்ச்சி கிடைப்பது வீட்டில் தான் என்று தீர்ப்பு வழங்கினார்.
  6. கதாகாலட்சேபம்.
    திரு.டி.விஸ்வநாதன் அவர்கள் மிகவும் சிறப்பான கதாகாலட்சேபம் நடத்தி
    அனைவரையும் மகிழச்செய்தார்.
  7. காத்தவராயன் – பாட்டும் நடனமும்.
    கதை :
    காத்தவராயனுக்கும் மந்திரவாதிக்கும் ஒரு போட்டி. அதாவது-
    மந்திரவாதி தன்னிடம் தீய சக்தியாக வைத்திருக்கும் ஏவல் மந்திரப்பொருட்களை
    காத்தவராயன் எடுத்துவிட்டால் தான் காத்தவராயனுக்கு அடிமை என்றும்-
    அதே சமயம் எடுக்காவிட்டால் காத்தவராயன் மந்திரவாதிக்கு அடிமை என்றும் கூற அச்சவாலை ஏற்று தெய்வத்தின் சக்தி கொண்டு காத்தவராயன் ஒவ்வொன்றாக எடுத்து விடுகிறான்.
    1.திரு.தெய்வசிகாமணி.
    2.திரு.இராமலிங்கம்.
    3.திரு.பாலசுந்தரம்.
    4.திருமதி.மல்லீஸ்வரி.
    5.சிறுவன்.
    ஐந்து பேரும் சிறப்பாக நடித்து அனைவரையும் மகிழச்செய்தனர்.

    3 -வது நிகழ்ச்சி 2019 ஜூலை மாத பிறந்தநாள் கொண்டாட்டம்.
    கீழ்கண்டவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.திரு. எம்.பாலையன்;. 15.07.1927.திரு. ஆர்.நடராஜன். 12.07.1945.திரு. கே.சுந்தரேசன். 09.07.1952.திருமதி. பகவதிசுந்தரி. 16.07.1953.திருமதி. கன்னியம்மா. 08.07.1960.
    4-வது நிகழ்ச்சி
    திரு. தெய்வசிகாமணி மற்றும் திரு. ராமலிங்கம் அவர்களின் குலுக்கல் சீட்டில் கிடைத்தவர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்தனர்.
    5-வது நிகழ்ச்சி
    கடைசியாக டாக்டர். சி.வி.பிள்ளை அவர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னவுடன்
    கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

SBDC 77th MEETING DT 28.7.2019 VIDEO PART I.