SBDC 78TH MEETING DT 25.08.2019

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 78 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 25.08.2019 )


SBDC SRI BALAJI DIABETIC CENTRE. அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர்.
இந்த
SRI BALAJI DIABETIC CENTRE க்கு வரும் நபர்களுக்கு உடலளவிலுள்ள நோயினை நமது டாக்டர்.சி.வி.பிள்ளை தீர்த்து வந்தார்.
பெரும்பாலோனார் அதிலும் மூத்த குடிமக்கள் மனதளவில் மிகவும் கஷ்டப்படுவதை உணர்ந்து- அவர்களை எப்படி குஷிப்படுத்தலாம் என தனது துணைவியாரிடம் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான்-
31.3.2013-ல் ஆரம்பித்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்;ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.
இந்த மன்றத்தின் 78-வது கூட்டம் 25.08.2019 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில்; எஸ்.பி.டி.சி -யின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த மாதக் கூட்டம் நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மாதமாகையால்- அதன் நினைவாக அனைத்து நிகழ்ச்சிகளும் மன்ற உறுப்பினர்களால் நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சி
திரு.தங்கராஜ் அவர்கள் தாயின் மணிக்கொடி பாரீர்
என்ற பாட்டைப் பாடி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
2 -வது நிகழ்ச்சி
சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட வேலு நாச்சியார் அவர்களைப் பற்றிய மிக முக்கியமான விபரங்களை திரு.மணிவாசகம் அவர்கள் சொல்ல திருமதி.பகவதி சுந்தரி அவர்கள் வேலு நாச்சியாராக சிறப்பாக நடித்து பல விஷயங்களை உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.
திரு.ராமையா – ; திரு.பாலசுந்தரம் இருவரும் மருது பாண்டியர்களாக திறம்பட நடித்தார்கள்.
3-வது நிகழ்ச்சி
பாரதியார் பாடிய சிந்து நதியின் மிசையினிலே என்ற பாட்டுக்கு
திரு.டி.எஸ்.கணேசன்- என்.கணேசன் – திரு.தங்கராஜ் – திரு.ஆர்.நடராஜன் – திரு.சந்திரசேகரன் – திரு.ராமையா – திருமதி.லட்சுமி நடராஜன் ஆகியோர் நடித்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்கள்.
4-வது நிகழ்ச்சி
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாரதியார் பாட்டை
திரு.சி.வி.நடராஜன் அவர்கள் சிறப்பாகப் பாடினார்.
5-வது நிகழ்ச்சி
பாரதியாரின் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாட்டுக்கு மகளிர்கள் திருமதி.சாந்தி விஸ்வநாதன் – திருமதி.இ.சாந்தி – திருமதி.பகவதி சுந்தரி – திருமதி.சுலோசனா – திருமதி.பத்மஜா
ஆகியோர் மிகவும் சிறப்பாக ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
6-வது நிகழ்ச்சி
பாரதியாரின் வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் பாட்டுக்கு
திரு.ஆர்.விஸ்வநாதன் – திரு.எம்.தெய்வசிகாமணி – திரு.என்.கணேசன் – திரு.ஆர்.நடராஜன் – திரு.பாலசுந்தரம் – திரு.மணிவாசகம்; ஆகியோர் சிறப்பாக நடித்தனர்.
7-வது நிகழ்ச்சி :
திருமதி.கோமதி மற்றும் திருமதி.லட்சுமி நடராஜன் அவர்களும்
பாடுவோமே பள்ளுப்பாடுவோமே என்ற பாட்டினை சிறப்பாகப் பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றனர்.
8-வது நிகழ்ச்சி:
சங்கே முழங்கு என்ற பாட்டுக்கு திரு.வி.மகாலிங்கம் – திருமதி.சாந்தி விஸ்வநாதன் – திருமதி.சுலோசனா – திருமதி.இ.சாந்தி – திருமதி.பத்மஜா – திரு.பாலசுந்தரம் – திரு.சந்திரசேகரன் – திரு.டி.விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பாக நடித்து அனைவரையும் மகிழ்வித்தனர்.
9-வது நிகழ்ச்சி :
ஆனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடிதடதவர்கள் வாழிய செந்தமிழ் பாடினர்.
10-வது நிகழ்ச்சி :
திரு.மகாலிங்கம் என்ற மாலி அவர்களுக்கு அவரது சேவையைப் பாராட்டி நாரத கான சபாவில் மாண்புமிகு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அவர்களிடம்; அவார்டு பெற்றதுக்கும்- மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் -ல் அவார்டு வாங்கியதற்கும் எஸ்.பி.டி.சி யில் கௌரவிக்கப்பட்டது.
11-வது நிகழ்ச்சி :
2019 ஆகஸ்ட் மாத பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
புpறந்த நாள் குழந்தைகள் :

  1. திரு.சூர்ய நாராயணராவ்.
  2. திரு.சி.வி.நடராஜன்.
  3. திரு.செல்வராஜ்.
  4. திரு.ராமையா.
  5. திரு.தேவராஜ்.

12-வது நிகழ்ச்சி :
திரு.தெய்வசிகாமணி குலுக்கலில் திருமதி.விசாலாட்சி அவர்களுக்கும்- திரு.ராமலிங்கம் குலுக்கலில் திருமதி.ரேவதி அவர்களுக்கும் பரிசுகள் கிடைத்தன.
கடைசி நிகழ்ச்சி :
அனைத்து உறுப்பினர்களும் எதிர் பார்த்த மருத்துவ நடனம் நடைபெற்றது. மகளிர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 2-வது பாட்டும் போட்டு மகளிர் உற்சாகமாக ஆடி முடித்ததும் கூட்டம் முடிவடைந்தது.
https://youtu.be/jik7XR25Eb4


https://youtu.be/jik7XR25Eb4


https://youtu.be/Ehy_hIFzjfM