SBDC 80TH MEETING DT 20.10.2019

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 80 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 20.10.2019 )
SBDC – SRI BALAJI DIABETIC CENTRE. அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர்.
இந்த
SRI BALAJI DIABETIC CENTRE. க்கு வரும் நபர்களுக்கு உடலளவிலுள்ள நோயினை நமது டாக்டர்.சி.வி.பிள்ளை தீர்த்து வந்தார்.
பெரும்பாலோனார் அதிலும் மூத்த குடிமக்கள் மனதளவில் மிகவும் கஷ்டப்படுவதை உணர்ந்து- அவர்களை எப்படி குஷிப்படுத்தலாம் என தனது துணைவியாரிடம் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான்-
31.3.2013-ல் ஆரம்பித்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்;ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.
இந்த மன்றத்தின் 80-வது கூட்டம் 20.10.2019 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில்; எஸ்.பி.டி.சி -யின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சி –மருத்துவச் சிரிப்பு :
மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பல வகையான சிரிப்புகளை வெளிப்படுத்தி LAUGHING THERAPY
செய்தனர்.
2 -வது நிகழ்ச்சி
சாமந்தி பிரிவைச் சார்ந்தவர்கள் 13 நிகழ்ச்சிகளை
நடத்தி மிகப் பெரிய சாதனை படைத்தனர்.

 1. காந்தி மகான் பாட்டு :
  திருமதி.லட்சுமி நடராஜன் பாட்டுப் பாட திரு.தங்கராஜ் அவர்களும் அவரது நடிப்புத்திறமையைக் காட்டினார்.
 2. வைஷ்ணவ ஜனதோ என்ற பாட்டை திருமதி.சரோஜா பாட திரு.தங்கராஜ் அவர்களும் அவரது நடிப்புத்திறமையைக் காட்டினார்.
 3. ஊழுருPடுநு குயுNஊலு ளுர்ழுறு.:
  6 ஜோடிகள் கலந்து சிறப்பான தோற்றத்தடன் வலம் வந்தனர்.
 4. திரு.ஆர்.பாலசுப்பிரமணியன் குடிப்பழக்கத்தை எப்படி மாற்றுவது என்பது பற்றி அவர் அனுபவத்தில் -அவர் போக்குவரத்து இயக்குநராக இருந்தபொழுது தொழிலாளிகளின் குடிப்பழக்கத்தை எப்படி மாற்றினார் என்பதை தெளிவாகச் சொல்லி அனைவரையும் வியக்க வைத்தார்.
 5. ஒரு பெண் வெளியில் புறப்படுமுன் எப்படி சீவி சிங்காரித்து
  தன் அழகை எப்படி ரசிப்பாள் என்பதை திரு.என்.கணேசன் அவர்கள் தனது மோனோ நடிப்பினால் தெரியப் படுத்தினார்.
 6. சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாட்டினை திரு.சி.வி.நடராஜன் அவர்கள் எல்லாரும் ரசிக்கும்படியாக
  பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
 7. ஆனிமுத்து வாங்கி வந்தேன் என்ற பாடலுக்கு திருமதி.எஸ்.சரோஜா-திருமதி.பி.ராஜேஸ்வரி-திருமதி.இ.சாந்தி
  ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறப்பான நடனம் ஆடி அனைவரையும் மகிழ வைத்தனர்.
 8. காசேதான் கடவுளடா என்ற பாட்டுக்கு திரு.ஆர்நடராஜன்-திரு.என்.கணேசன்- டி.எஸ்.கணேசன் மூன்று பேரும் நடித்தும்-நடனமாடியும் அனைவரின் கைதட்டலையும் பெற்றனர்.
 9. பத்மஜா குழுவின் வில்லுப் பாட்டு நடைபெற்றது.
 10. ஜின் ஜினுக்கா சின்னக்கிளி என்ற பாட்டுக்கு திருமதி.சாந்தி ஆறுமுகம் மிகவும் சிறப்பாக நடனம் ஆடி அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
 11. என்னடி ராக்கம்மா என்ற பாட்டை திரு.டி.எஸ்.கணேசன் சிறப்பாகப் பாடி அனைவரின் கைதட்டலைப் பெற்றார்.
 12. காசிக்குப்போகும் சன்னியாசி என்ற பாட்டுக்கு-
  திரு.ஆர்.நடராஜன்- திரு.ஆர்.விஸ்வநாதன் -திருமதி.சுலோசனா
  ஆகியோர் சிறப்பாக நடித்தும்-நடனமும் ஆடினர்.
 13. தீபங்கள் ஆயிரம் என்ற பாட்டுக்கு சாமந்தி பிரிவு மகளிர்
  சிறப்பான நடனம் ஆடி அனைவரையும் மகிழச் செய்தனர்.

3-வது நிகழ்ச்சி :
சாமந்திப்பிரிவின் 13 நிகழ்ச்சிகள் முடிந்தன.
அக்டோபர் 2019 மாத பிறந்த நாள் கீழ்கண்டவர்களுக்கு
கொண்டாடப்பட்டது.
1.திரு.பி.ரத்தினசாமி.
2.திரு.எம்.என்.சீனிவாசன்.
3.திரு.கே.நாராயணன்.
4.திருமதி.எஸ்.சரோஜா.
5.திரு.பி.வெங்கடேசன்.
3-வது நிகழ்ச்சி
திரு.தெய்வசிகாமணி நடத்தும் குலுக்கல் சீட்டில் பரிசு
திரு.சந்திரசேகரனுக்கு கிடைத்தது.
திரு.ராமலிங்கம் நடத்தும் குலுக்கல் சீட்டில் பரிசு
திரு.பாலசுந்தரத்திற்;கு கிடைத்தது.

கடைசி நிகழ்ச்சி :
அனைத்து உறுப்பினர்களும் எதிர் பார்த்த மருத்துவ நடனம் ஆண்களுக்கு தனியாகவும்-பெண்களுக்கு தனியாகவும் நடைபெற்றது. அனைவரும்; உற்சாகமாக ஆடி முடித்ததும்
நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது.