SBDC 81ST MEETING DT 24.11.2019

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 81 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 24.11.2019 )
SRI BALAJI DIABETIC CENTRE. அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர்.
இந்த SRI BALAJI DIABETIC CENTRE க்கு வரும் நபர்களுக்கு உடலளவிலுள்ள நோயினை நமது டாக்டர்.சி.வி.பிள்ளை தீர்;த்து வந்தார்.
பெரும்பாலோனார் அதிலும் மூத்த குடிமக்கள் மனதளவில் மிகவும் கஷ்டப்படுவதை உணர்ந்து- அவர்களை எப்படி குஷிப்படுத்தலாம் என தனது துணைவியாரிடம் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான்-
31.3.2013-ல் ஆரம்பித்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்;ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.
இந்த மன்றத்தின் 81-வது கூட்டம் 24.11.2019 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில்; எஸ்.பி.டி.சி -யின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சி –மருத்துவச் சிரிப்பு :
மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பல வகையான சிரிப்புகளை வெளிப்படுத்தி LAUGHTER THEROPY
( சிரிப்பு சிகிச்சை ) செய்தனர்.
2 -வது நிகழ்ச்சி
ரோஜா பிரிவைச் சார்ந்தவர்கள் 8 நிகழ்ச்சிகளை
நடத்தி மிகப் பெரிய சாதனை படைத்தனர்.

 1. ஒளவையும் முருகனும் :
  ஒளவையாக திருமதி.செல்வம் அவர்களும் முருகனாக திரு.எம்.என்.சீனிவாசன் அவர்களும் பழம் நீயப்பா என்ற பாடலுக்கு திறமையாக நடித்து அவர்களது நடிப்புத்திறமையைக் காட்டினர்.
 2. பொய்க்கால் குதிரை ஆட்டம்.
  திரு.தெய்வசிகாமணி மற்றும் திருமதி.ரேவதி தெய்வசிகாமணி இருவரும் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடும் நபர்களாக மாறி அசல் பொய்க்கால் குதிரைகளைக் கொண்டு ஆடி அரங்கத்தை அதிர வைத்தனர்.
 3. அப்பாவி அப்பா நாடகம்:
  திரு.பரமேஸ்வரன்- திரு.டி.விஸ்வநாதன்-திருமதி.வி.முத்துலட்சுமி –திரு.செல்வராஜ் – திருமதி.விசாலாட்சி ஆகியோர் அருமையான அப்பாவி அப்பா நாடகத்தில் மிகச்சிறப்பாக நடித்து அனைவரின் கைதட்டலைப் பெற்றனர்.
 4. இருவர் நடனம் :
  திரு.புருஷோத்தமன் – திருமதி.ராஜம் புருஷோத்தமன் இருவரும் அன்று வந்ததும் இதே நிலா என்ற பாட்டுக்கு சிறப்பாக நடனம் ஆடி அனைவரையும்
  மகழ்வித்தனர்.
 5. வீர சிவாஜி நடிப்பு :
  ராமன் எத்தனை ராமனடி என்ற திரைப்படத்தில் வீர சிவாஜி பற்றி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்ததை அப்படியே திரு.பாலசுந்தரம் உணர்ச்சிவசமாக நடித்து அனைவரின் கைதட்டலைப் பெற்றார்.
 6. தீப நடனம் :திருமதி. அன்னபூரணி – திருமதி.பகவதிசுந்தரி – திருமதி. சாந்தகுமாரி – திருமதி.மெய்யழகு ஆகியோர் கைகளில் தீபங்களை ஏற்றி சிறப்பான நடனம் ஆடி அனைவரையும் மகிழச் செய்தனர்.
 7. மருத்துவர் பேட்டி :
  திரு.டி.விஸ்வநாதன் – திரு.ஸ்ரீதர் இருவரும் மிகச் சிறப்பான- எல்லாரும் ரசிக்கும்படியான மருத்துவர் பேட்டியினைத் தந்தனர்.
 8. குழு நடனம் :
  திரு.தெய்வசிகாமணி – திரு.ராமலிங்கம் – திரு.சந்திரசேகரன் – திரு.புருஷோத்தமன் ஆகியோர் கடவுள் எனும் முதலாளி என்ற பாட்டுக்கு
  சிறப்பான நடனம் ஆடி அனைவரையும் அசத்தி விட்டனர்.

அடுத்து புது உறுப்பினர்களை டாக்டர் அறிமுகம் செய்து வைத்தார்.

அடுத்த நிகழ்ச்சியாக – 81-வது மாத பிறந்த நாள் கொண்டாட்டத்தில்; திரு.சேஷாத்திரி – திருமதி.வசந்தா சிதம்பரம் – திரு.வெங்கட்ராமன் ஆகியோருக்கு கொண்டாடப்பட்டது.

அடுத்து திரு.தெய்வசிகாமணியின் குலுக்கல் சீட்டில் திருமதி.வி.முத்துலட்சுமி பரிசு பெற்றார்.

 அடுத்து திரு.ராமலிங்கத்தின் குலுக்கல் சீட்டில் திருமதி.சேஷாத்திரி

பரிசு பெற்றார்.

 கடைசி நிகழ்ச்சியான மருத்துவ நடனத்தில் அனைத்து உறுப்பினர்களும் சிறப்பாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

  டாக்டர்.சி.வி.பிள்ளை - நிறுவனர் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது. 

C