SBDC 82nd MEETING

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 82 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 22.12.2019 )
SRI BALAJI DIABETIC CENTRE. அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர்.
இந்த
SRI BALAJI DIABETIC CENTRE. க்கு வரும் நபர்களுக்கு உடலளவிலுள்ள நோயினை நமது டாக்டர்.சி.வி.பிள்ளை தீர்;த்து வந்தார்.
பெரும்பாலோனார் அதிலும் மூத்த குடிமக்கள் மனதளவில் மிகவும் கஷ்டப்படுவதை உணர்ந்து- அவர்களை எப்படி குஷிப்படுத்தலாம் என தனது துணைவியாரிடம் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான்-
31.3.2013-ல் ஆரம்பித்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்;ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.
இந்த மன்றத்தின் 82-வது கூட்டம் 22.12.2019 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில்; எஸ்.பி.டி.சி -யின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
மருத்துவச் சிரிப்பு :
மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பல வகையான சிரிப்புகளை வெளிப்படுத்தி LAUGHTER THEROPY
செய்தனர்

மாறுவேடப் போட்டியின் நடுவரை அறிமுகப்படுத்துதல்
மாறுவேடப் போட்டியின் நடுவர் திரு.சேகரன்- செயலாளர்- திருவல்லிக்கேணி -ஹ்யூமர் கிளப் அவர்களை நமது மன்ற நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் மன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் திரு.ராஜாமணி திரு.சேகரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மாறுவேடப் போட்டி :
மாறுவேடப் போட்டியில் 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 1. திரு.வி.செல்வராஜ் காந்தியடிகளாக வேஷம் போட்டு சுதந்திரம் பற்றிய சிறப்பான செய்திகளைச் சொல்லி அனைவரையும் சிந்திக்க வைத்தார்.
 2. திரு.எஸ்.பாலசுந்தரம் சாக்ரட்டீஸாக வேஷம் போட்டு அவரைப் போலவே நடித்து அவர்; பேசிய நீண்ட வசனத்தைக் கேட்டு அனைத்து உறுப்பினர்களும் வெகு நேரம் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 3. திரு.என்.கணேசன் குடுகுடுப்பைக்காரனாக வந்து அசல் குடுகுடுப்பைக்காரன் பேசுவது போல நடித்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
 4. திருமதி. இ.மல்லீஸ்வரி கன்னியாஸ்திரியாக வந்து சிறப்பாக நடித்தும்- பாட்டுப் பாடியும் அனைவரையும் மகிழ்வித்தார்.
 5. திருமதி.கே.எஸ்.பத்மஜா நடிகை சுகாசினிபோல் வேஷமிட்டு
  சிறப்பாக நடித்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
 6. திரு.எஸ்.ஆர்.புருஷோத்தமன் மகாகவி பாரதியார் வேஷமிட்டு சிறப்பாக நடித்தார்.
 7. திருமதி.பி.ராஜம் ஜெயலலிதா வேஷமிட்டு சிறப்பாக நடித்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
 8. திரு.எஸ்.ராமலிங்கம் வள்ளலார் வேஷமிட்டு திருவருட்பா பாடல் பாடி சிறப்பாக நடித்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
 9. திருமதி.செல்வம் பழம்-காய்கறி விற்பனையாளராக வந்து பழம்-காய்கறி விற்பனை செய்யும் பாட்டியாகவே மாறி மிகவும் சிறப்பாக நடித்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
 10. திருமதி.இ.சாந்தி குறத்தி வேஷமிட்டு வந்து ஊசி-பாசி விற்கும் அசல் குறத்தியாகவே நடித்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
 11. திருமதி.சாந்தி விஸ்வநாதன் பாரதமாதாவாக வேடமிட்டு வந்து
  அனைவரையும் அசத்தி விட்டார்.
 12. திரு.ஸ்ரீதரன் குஜராத்திப் பெண்ணாக வந்து வெகு சிறப்பான நடனம் ஆடி அனைவரையும் மகிழ வைத்தார்.
 13. திருமதி.எஸ்.சுலோசனா ஆண்டாளாக வந்து சிறப்பான பாடல் ஒன்றையும் பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
 14. திரு.சி.தங்கராஜ் தனது 83-வது வயதிலும் தானும் நடிக்க வேண்டும் என்ற சித்தாந்தத்துடன் குருடராக வந்து நடித்து நானும்
  பொம்மை நீயும் பொம்மை என்ற பாட்டைப் பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
  15.திரு.டி.விஸ்வநாதன் கோவில் அர்ச்சகராக வந்து அனைவரையும் அசத்தி விட்டார்.
  அதன்பின் நடுவர் மாறுவேடப் போட்டியின் முடிவைத் தெரிவித்தார்.
  முதல் பரிசு : சாக்ரட்டீசாக நடித்த திரு.எஸ்.பாலசுந்தரம்.
  2-வது பரிசு : மகாத்மா காந்தியாக நடித்த திரு.வி.செல்வராஜ்.
  3-வது பரிசு : குறத்தியாக நடித்த திருமதி.இ.சாந்தி.
  பரிசுகளை நடுவர் சேகரன் வழங்கினார்.

புpறந்த நாள் கொண்டாட்டம்.
கீழே குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப் பட்டது.
1.திரு.சந்திரசேகரன்.
2.திருமதி.சத்தியவாணி.
3.திருமதி.மல்லீஸ்வரி.
4.திருமதி.இ.சாந்தி.
5.திரு.டி.விஸ்வநாதன்.

புது வருட கேக் வெட்டுதல் :
புது வருடம் 2020-ஐ கொண்டாடும் பொருட்டு புது வருட கேக்கினை மன்றத்தின் சி.இ.ஓ வெட்டினார். அனைவரும் கை தட்டி ஆரவாரமாக தங்களது மகிழ்ச்சியினைத் தெரிவித்தனர்.
எப்பொழுதும் உள்ள மருத்துவ நடனத்திற்க்கு பதிலாக- புது வருட இசைகள் முழங்க வெகு நேரம் நடனமாடி அனைவரும் மகிழ்ந்தனர்.
மன்ற நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது.

VIDEO PART I

https://youtu.be/qEISwpQ2Ie0


VIDEO PART III