SBDC 83RD MEETING DT 26.01.2020

எஸ். பி. டி. சி யின் 83-வது கூட்டம் (26.01.2020)
எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 83 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 26.01.2020 ).

இந்த மன்றத்தின் 83-வது கூட்டம் 26.01.2020 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில்; எஸ்.பி.டி.சி -யின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
2-வது நிகழ்ச்சியாக காலஞ்சென்ற மன்ற உறுப்பினர்களுக்காக இரங்கல்
நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ். பி. டி. சி யின் 82-வது கூட்டம் (22.12.2019) முடிவடைந்த மூன்றே நாட்களில் மன்றத்தில் மிகவும் ஈடுபாடு உள்ள
திருமதி. கோமதி கணேசன் 25.12.2019 அன்று காலமானது மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதன்பின் 82-வது கூட்டத்தில் (22.12.2019 ) வள்ளலாராக வந்த
திரு.ராமலிங்கம் 08.01.2020 அன்று காலமானது மன்ற உறுப்பினர்கள்
அனைவரையும் மறுபடியும் சோகக்கடலில் ஆழ்த்தியது.
முதலில் நமது நிறுவனர்.டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள்
தனது குடும்ப உறுப்பினர்களை இழந்து விட்டதாக மிகவும்
உருக்கமாகப் பேசினார்.
2-வதாக திரு.வி.மாலி அவர்களும்-
3-வதாக திரு.எம்.ராஜாமணி அவர்களும்-
4-வதாக திரு.தெய்வசிகாமணி அவர்களும்-
5-வதாக திரு.பாலசுந்தரம் அவர்களும்-
6-வதாக திரு.என்.கணேசன் அவர்களும்-
7-வதாக திரு.ரங்கராஜன் அவர்களும்-
8-வதாக திருமதி.பகவதி சுந்தரி அவர்களும்-
9-வதாக திருமதி. பத்மஜா அவர்களும்-
காலமான மன்ற உறுப்பினர்களைப் பற்றி பேசினார்கள்.
3-வது நிகழ்ச்சியாக
திரு. எம். தெய்வசிகாமணி அவர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஸ்ரோதஸ்வினி
குழுவின் சிறப்பான- அனைவரும் ரசிக்கும்படியான பக்திப் பாடல்களை 1.15 மணி
நேரம் பாடி அனைவரின் கரகோஷ கைதட்டலைப் பெற்றனர்.

4-வது நிகழ்ச்சியாக
ஜனுவரி மாதத்தில் பிறந்த கீழ்கண்ட உறுப்பினர்களுக்கு பிறந்த நாள்
கொண்டாடப்பட்டது.

  1. திரு. பி.ரங்கராஜன். ( 28.01.1941 ).
  2. திரு. ஆர்.விஸ்வநாதன். ( 01.01.1951 ).
  3. திருமதி. பத்மஜா ( 13.01.1956 ).
  4. திருமதி. வி.முத்துலட்சுமி ( 01.01.1960 ).

நிறுவனர் டாக்டர் .சி.வி.பிள்ளை அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது.

.