SBDC 85-7TH ANNIVERSARY dt 15.03.2020.

எஸ்.பி.டி.சி-யின் 85-வது மாதக்கூட்டம் மற்றும் 7-வது ஆண்டுவிழா (15.03.2020)
எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின்; 7-வது ஆண்டுவிழா 15.03.2020 ஞாயிறு அன்று ஸ்ரீபாலாஜி டயபெடிக் சென்டர்-எண்.5-2-வது மெயின் ரோடு-விஜயநகர்-வேளச்சேரி-சென்னை-42 வளாகத்தில் நடைபெற்றது.
காலை 8.30 முதல் 9.30 மணி போட்டோ அமர்வு (செஷன்) நேரத்தில்
அனைத்து உறுப்பினர்களும் 7-வது ஆண்டுவிழா பேனர் பக்கத்தில் நின்று
போட்டோ எடுத்துக் கொண்டனர்.
விழா தொகுப்பாளர் திரு.எஸ்.பாலசுந்தரம் முதல் நிகழ்ச்சியான இறைவணக்க அறிவிப்பைத் தொடர இறைவணக்கம் நடைபெற்றது.
திரு.ஆர்.விஸ்வநாதன்-செயலர் தனது வரவேற்புரையில் அனைவரையும்
வரவேற்றுச் சிறப்பாகப் பேசினார்.
திரு.வி.மணிவாசகம்-தலைவர் அமெரிக்காவில் இருப்பதால் அவரது உரையினை திரு.எம்.தெய்வசிகாமணி-பொருளாளர் மிகச்சிறந்த முறையில் உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.
நமது மன்ற நிறுவனர்.டாக்டர்.சி.வி.பிள்ளை -அவருடைய நெருங்கிய
தோழராகிய பத்மஸ்ரீ டாக்டர்.சுந்தரம் நடராஜன்- உலகப்புகழ் பெற்ற
கண் டாக்டரை – சிறப்பு விருந்தினரை மேடைக்கு அழைத்து வந்ததும் உறுப்பினர்கள் அனைவரும் கரகோஷமாக கைதட்டி வரவேற்றனர்.
நமது டாக்டர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தும்பொழுது மும்பையில் சேரிகளில் வசிக்கும் ஒரு லட்சம் மக்களுக்கு பல ஆண்டுகளில் இலவசமாக
கண் வைத்தியம் செய்துள்ளார் என்று குறிப்பிட்டார். அனைவரும் சிறப்பு விருந்தினiர் வெகுவாகப் பாராட்டினர்.
சிறப்பு விருந்தினரைக் கௌரவப்படுத்தும்பொருட்டு திரு.எம்.ராஜாமணி
பத்மஸ்ரீ டாக்டர்.சுந்தரம் நடராஜன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். திருமதி.சித்ரா- சி.இ.ஓ அவர்கள் நினைவுப்பரிசு ஒன்றினை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ டாக்டர்.சுந்தரம் நடராஜன் நமது மன்ற
7-வது ஆண்டு விழா கேக்கை வெட்டினார். கேக்கை தனது நண்பரான டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களுக்கும் நமது சி.இ.ஓ அவர்களுக்கும் ஊட்டிய
காட்சியை அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ டாக்டர்.சுந்தரம் நடராஜன் அவர்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் எஸ்.பி.டி.சி செவிலியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
பரிசுகளை வழங்கும்பொழுது ஒவ்வொருவருக்கும் தான் கொண்டுவந்த பிளாஸ்டிக் அட்டையில் எழுதப்பட்ட ஒரு திருக்குறளை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் பேசும்பொழுது நமது மன்றத்தைப் பாராட்டியதுடன்
சுவாமி விவேகானந்தரின் அருள்மொழிகளை நினைவு கூர்ந்தார்.நமது டாக்டர்
சிறப்பு விருந்தினருக்கு நன்றி கூற அவர் விடைபெற்றுச் சென்றார்.
அடுத்த நிகழ்ச்சியாக திரு.ஆர்.விஸ்வநாதன் ஸ்பான்சர் பண்ணிய
-குழுவின் நடனநிகழ்ச்சி நடைபெற்றது.
அடுத்த நிகழ்ச்சியாக 2019-2020 – ல் சாமந்தி-ரோஜா பிரிவுகளில் உள்ள உறுப்பினர்கள் நடித்த நாடகங்களுக்கும்-நடித்த உறுப்பினர்களுக்கும்-பாடியவர்களுக்கும்-நடனம் ஆடியவர்களுக்கும் 66 பரிசுகளுக்கு மேல் வழங்கப்பட்டன.
2019-2020-ல் அனைத்து நிகழ்ச்சிகளும் வெற்றி பெறக் காரணமாயிருந்த
ஆண் பரிசு திரு.எம்.தெய்வசிகாமணிக்கும்- அனைத்து நிகழ்ச்சிகளும் வெற்றி பெறக் காரணமாயிருந்த பெண் பரிசு திருமதி. சாந்தி விஸ்வநாதன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
அடுத்த நிகழ்ச்சியாக திரு.ஆர்.விஸ்வநாதன் ஸ்பான்சர் பண்ணிய
-குழுவின் 2-வது நடனநிகழ்ச்சி நடைபெற்றது.
குறும்படம் – துள்ளித்திரியும் பருவம்
2019-2020-ல் உறுப்பினர்கள் நடித்த- நடனமாடிய – பாடிய சுமார் 500 நிமிடங்களுக்கு மேல் ஓடிய வீடியோவை மன்றத்தின் சி.இ.ஓ திருமதி.சித்ரா பிள்ளை தனது கடும் உழைப்பினால் அதனை 35 நிமிட குறும்படமாக ஆக்கி
“ துள்ளித்திரியும் பருவம்” என்று பெயரிட்டு 15.03.2020 7-வது ஆண்டுவிழாவில் அனைத்து உறுப்பினர்களும் கண்டுகளிக்கும்படி வீடியோவை மிகப்பெரிய டி.வி-யில் போட்டுக் காட்டப்பட்டது. அந்தக் குறும்படத்தை அனைவரும் பாராட்டினர்.
அடுத்த நிகழ்ச்சியாக-ரங்காஸ் சிம்போனி மியூசிக் ஆரம்பிக்கப்பட்டது.
தனது வயதையும் பொருட்படுத்தாமல் உறுப்பினர்கள் இசைக்குத் தகுந்தபடி
ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே உறுப்பினர்கள் இடைவெளி கிடைக்கும் பொழுது
மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவைச் சுவைத்து வந்தனர்.
மெல்லிசை நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுது இசைக்குழுவினரில் ஒருவர்
ரஜினி வேடமிட்டு உறுப்பினர்களுடன் ஆடி அனைவரையும் ஆனந்தக் கடலில் மூழ்கச்செய்தார். மெல்லிசை தொடர்ந்து நடைபெற்றது. உறுப்பினர்கள்- டாக்டர்-சி.இ.ஓ- மன்ற உறுப்பினர்கள் மெல்லிசைக்கு ஏற்றவண்ணம் ஆடி மகிழ்ந்தனர்.
ரஜினி வேடமிட்டவர் மறுபடியும் ரஜினியின் வித்தியாசமான 3 வேடங்களில் வந்து அசத்தி விட்டார்.
அடுத்த நிகழ்ச்சியாக- கீழ்கண்டவர்களுக்கு மார்ச் மாத பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
1.திருமதி.டி.செல்வம்.2. திரு.பி.சுந்தரராஜன்.3. திருமதி.வி.எஸ்.லட்சுமி.

  1. திருமதி.பி.ராஜேஸ்வரி. 5. திருமதி.டி.ரேவதி.
    மெல்லிசை சிறிது நேரம் நடைபெற்றது.
    மெல்லிசை முடிந்தபின் 12 மாதக்கூட்டம்-11 மாதக்கூட்டம் வருகை தந்தவர்களுக்கு திருமதி.சித்ரா பிள்ளை- சி.இ.ஓ அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.
    2019-2020-ல் நிகழ்ச்சிகள் நடத்திய சாமந்தி-ரோஜா ஆகிய 2 பிரிவுகளில் சாமந்திப் பிரிவு வின்னராகவும் ரோஜாப் பிரிவு ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு
    அதற்க்கு உண்டான ஷீல்டுகளை வின்னர் சாமந்திப்பிரிவு கேப்டன் திருமதி.சாந்தி அவர்களிடமும் ரன்னர் ரோஜாப் பிரிவு கேப்டன் திரு.டி.விஸ்வநாதன் அவர்களிடமும் வழங்கப்பட்டது.
    இறுதியாக மன்ற நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள் அனைத்து தரப்பினர்களுக்கும் நன்றிகளைக் கூறி 7-வது ஆண்டு விழாவினை நிறைவுறச் செய்தார்.